Header Ads



வாக்களிப்பதற்காக நாடு திரும்பிய, இலங்கையர்களின் உண்மையான விபரம் என்ன..?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் தொழில் புரியும் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்களும், இரட்டை குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கானவர்களும் இலங்கை வந்துள்ளதாக கூறி சம்பந்தப்பட்ட வேட்பாளரின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல் சட்டங்களை மீறி இந்த பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் 2010 நவம்பர் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்றவர்களில் 809 பேரே இலங்கைக்கு வந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக அந்த திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் இலங்கையின் இரட்டை குடியுரிமை பெற்ற 723 பேரே இலங்கை வந்திருந்தனர்.

அதேவேளை 2019ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை வெளிநாடுகளில் தொழில் புரிவோரில் 39,553 இலங்கையர்களே நாடு திரும்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 38,325 பேர் நாடு திரும்பியிருந்தனர் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.