Header Ads



அதாஉல்லா மீது தண்ணீரை வீசியடித்து, மனோ கணேசன் தாக்குதல்: தொலைக்காட்சி நிகழ்சியில் குழப்பம்


தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திய முன்னார் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீது, தண்ணீர் கிளாசை – தான் வீசி எறிந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரடி ஒளிபரப்புக்கு பின்னர், 8 மணி வரையிலான ‘பதிவு செய்யப்பட்ட’ நிழ்ச்சியின் போதே, இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மனோ கணேசன் அந்தப் பதிவில்;

‘தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.

அதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது, என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்து கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் அதாஉல்லா இடையூறு செய்து கொண்டே இருந்தார்.

இந்நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளே காரணம் என்று, முழுக்க முழுக்க பெரும்பான்மை நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் ‘சூட்டை’, நான் எறிந்த ‘நீர்’ குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.

என்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன்.

நடந்தவற்றை ‘எடிட்’ செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி ‘மின்னல்’ நிகழ்ச்சி தயாரிப்பாளரிடமும் சொன்னேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


வீடியோ 

3 comments:

  1. THIS MAN ATHAULLA IS WITHOUT HIS KNOWLEDGE MAKING MANO GANESEAN A HERO AMONG ESTATE TAMILS.

    ReplyDelete
  2. Former Minister Mano Ganesan is making use of the opportunity to "POLARIZE" the Upcountry Tamils and Tamils in Colombo by behaving in the manner he did during the closing-up time of the Minnal programme today.
    The "triggering" word was - "Thottakkaaralgal" mentioned by Former Minister Atthaullah during the interaction at the show. "The Muslim Voice" feels that it was not an appropriate word to use and on behalf of Former Minister Atthaullah, "The Muslim Voice" wishes to appologise to the Up-country Tamil communities. But "The Muslim Voice" wishes to tell Former Minister Mano Ganesan the Former Minister Attahullah used the Tamil translated word of "WATHUKARA JANATHAWA which means "Thottakkaaralgal". As such Mano Ganesan's behaviour is totally unacceptable and Attahullah has the right for an appology. At the same time, "The Muslim Voice" wishes to state that it is fully in agreement with all that was presented by Former Minister and Leader of the National Congress Attaullah concerning the issues facing the minority communities and the Muslim community at large, especially those living in the North and East. It was also confirmed by both the moderator and Former Minister of the NDF, Mano Ganesan that HE. Gotabaya Rajapaksa got more around 500,000 votes from the Tamils and Muslims. "The Muslim Voice" has maintained consistantly that 30 % of the Muslim Vote Bank voted HE. Gotabaya Rajapaksa at the November 16th., presidential election.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. IVAN NALLA PAITIYAM MUTHINA ORU PAITIYA KARAN

    ReplyDelete

Powered by Blogger.