Header Ads



நாமல் வெளிநாடு பறக்கலாம் - பயணத்தடை பெப்ரவரி வரை நீக்கம்!

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நிதி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது. இதன்போது நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி தாக்கல் செய்த பிரேரணையை பரிசீலனை செய்த நீதிவான் பிரதீப் ஹெட்டியராச்சி இந்த அனுமதியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் மூலம் 30 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மற்றும் 5 பேருக்கு எதிராக மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.