Header Ads



9 லட்சத்து 47,606 புதிய வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்கத் தகுதி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 9 லட்சத்து 47 ஆயிரத்து 606 புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2018ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 96 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 9 லட்சத்து 47 ஆயிரத்து 606 பேர் புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இந்த வாக்காளர்கள் முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

2015ஆம் ஆண்டு 3 லட்சத்து 76 ஆயிரத்து 715 பேரும், 2016ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 765 பேரும், 2017ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 897 பேரும், 2018ஆம் ஆண்டு 2 லட்சத்து 31 ஆயிரத்து 229 பேரும் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.