Header Ads



அதாவுல்லாவிற்கு எதிராக, கொழும்பில் ஆர்ப்பாட்டம் - 7 பேர் பங்கேற்பு


முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக இன்று -26- இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போது மலையக மக்களை தகாத வாரத்தை பிரயோகம் கொண்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அதாவுல்லாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

8 comments:

  1. சரியா எண்ணுங்கோ
    ஆறு பேர்தான்

    ReplyDelete
  2. அண்ணா,வட்டத்த வட்டம் என்று சொல்றது தானே வழக்கம்.பந்து என்று சொல்வதில்லையே!
    அவ்வாறு தான் தோட்டக்காடு என்பது காலா காலமாக வழக்கத்தில் இருக்கும் சொல்தானே.

    ReplyDelete
  3. தோட்டக்காடு என்பது பரவாஇல்லை, சிங்களவர்கள் கள்ளத்தோணி என்றல்லவா சொல்வார்கள். மனோ அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு அடித்தளம் போடுகிறார் . அவ்ளதுதான்.

    ReplyDelete
  4. தோட்டக்காட்டான் என்றால் இவர்களுக்கு கோபம் வருதென்றால் இவர்கள் ஏன் இவர்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு முன்னேறவில்லை? இன்னும் தோட்டக்காட்டான் என்கிற வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு மற்றவர்களை சாடுவதில் பயனில்லை. நாகரீக உலகிற்குள் முதலில் இவர்கள் வருவதற்கு முயற்சி செய்யாமல் ஆர்ப்பாட்டம் மசிறு மட்டையெல்லாம் தேவையற்றது

    ReplyDelete
  5. we have to learn to respect people wahtever the ciluture or Clare they being to since all were created by God and we didn't ask or select our birth.athaulla though he used that word probably he was not intending to discriminate.that was a flow most of the srilankans used earlier.he should have apologised for that word and I. Sure he was a bit confused.

    ReplyDelete
  6. தோட்டக்காட்டான், கள்ளத்தோணி போன்ற சொற்களை இன்று அனைவரும் மறந்து இருந்தனர். சொன்னவனும் மறந்து விட்டான். சொல்லப்பட்டவனும் மறந்து விட்டான். அதாஉல்லா தண்ணி போட்ட மப்புல பேசி இருப்பார் . நிகழ்ச்சி நடத்தியவரை வைத்தது மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம். அல்லது அவரை வெளியேற்றி இருக்கலாம். அல்லது வெளிநடப்பு செய்து இருக்கலாம். மனோ கணேசன் ஆடிய ஆட்டத்தில் அந்த சொற்களுக்கு மீண்டும் உயிர் வந்து விட்டது. மீண்டும் பாவிக்கத் தொடங்குவார்கள் . அந்த சொற்கள் மறைய இன்னும் ஒரு 20 வருடங்கள் செல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.