Header Ads



இதுவரை 700 யாசகர்கள் பிடிபட்டனர் - தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைப்பு

மேல்மாகாணத்தில் யாசகம் செய்வோரை அகற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்கும் காவல்துறை தலைமையகம் வழங்கிய அறிவுறுத்தலின் கீழ் மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் மற்றும் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சுமார் 700 யாசகர்கள் இன்று வெளியேற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அம்பலாங்கொடை-ரிதியகம யாசக தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், யாசகம் பெறும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. As per public interest its a right decision of the president.
    This will help the country to ensure the following..
    1. For the national safety
    2. To make a beautiful cities.

    Further this help the Needy people to stay safly in the camp and get their food, medicine, shelter and cloths free of charge without any difficulties.

    ReplyDelete

Powered by Blogger.