Header Ads



எமக்கு 40 வீத சிங்கள வாக்குகள் தேவை, சில மாவட்டங்களில் எமக்கு பாதக முடிவுகள் கிடைக்கலாம் - நவீன்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு நாட்டில் இருக்கும் ஆதரவு இரு மடங்காக அதிகரித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியாவில் இன்று -09- பிற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் நாட்டின் மூலை, முடுக்குகளுக்கு சென்றுள்ளோம். நான் ஒரு வாரம் வட மத்திய மாகாணத்தில் இருந்தேன். மகாவலி கிராமங்களுக்கு சென்றேன். சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

எமக்கு 40 வீதமான சிங்கள மக்களின் வாக்குகள் தேவை. தமிழ், முஸ்லிம் வாக்குகள் கிடைத்தால் நாம் பெற்றி பெற முடியும். நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவை இரண்டு இலட்சம் மேலதிக வாக்குகளை வழங்கி வெற்றி பெற செய்யுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சில மாவட்டங்களில் எமக்கு பாதகமான முடிவுகள் கிடைக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் எம்மால் வெற்றி பெற முடியாது. குறிப்பாக நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும் வடக்கு, கிழக்கிலும் எம்மால் முற்றாக வெல்ல முடியும்.

அது தான் ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு சாதகமாக அமையும். பொதுத் தேர்தலில் வாக்குகள் பிரிந்து செல்லும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன,மத,சாதி என எந்த வேற்றுமைகளும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறக் கூடிய சிறந்த வேட்பாளரை நாங்கள் நிறுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.