20 நாட்களுக்கு பிறகு, ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து
இருபது நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் பதற்றம் காரணமாக ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுமார் இருபது நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் இன்று (04) தரையிறங்கியதாக ஈரானின் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஈரானின் விமான போக்குவரத்து துறையின் ஸ்திரத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment