November 07, 2019

ஹிஸ்புல்லாஹ்வுக்கு முதலாவது வாக்கை வழங்கி, 2 வது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குக!


(ஆர்.எஸ்.மஹி)  

கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ‘நமது கனவு’ எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமூகத்தின் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு – ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலும் பேச்சு நடத்திய போதிலும் அவர்கள் தமது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காத நிலையில், முஸ்லிம் சமூகம் தமது இரண்டாவது விருப்பு வாக்கை சிந்தித்து அளிக்குமாறு -  தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின்  மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா நேற்று புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 

ஜனாதிபதி வேட்பாளளர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் பிரதான இரண்டு வேட்பாளர்களுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்ட தேசிய முஸ்லிம் சிந்தனையாளர்களின் மையம் என்ற சுயாதீன குழு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கூறியதாவது:- 

“கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் எந்த கட்சியையும் சாராது இம்முறை சுயாதீன ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். அவர் ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நிபந்தனைகளை முன்வைக்கின்ற ‘நமது கனவு’ என்கின்ற ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளார். அவரது ஒட்டகச்சின்னத்துக்கு முதலாவது விருப்பு வாக்கினை வழங்குங்கள் என்று அவர் கூறுவதன் மூலம் இந்த ‘நமது கனவு’ என்கின்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான மக்கள் ஆணையினை அவர் கோருகின்றார். இது தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முஸ்லிம் மக்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு இவை தான் என்பதை பதிவு செய்கின்ற – ஆவணப்படுத்துகின்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமைந்துள்ளது. 

முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகிவந்திருந்தது. ஆட்சியில் இருந்த பிரதான இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. அதனால் இம்முறை இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முன்னணி முஸ்லிம் கட்சி தலைவர்களில் ஒருவர் போட்டியிடவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம்.

என்றாலும் 2010க்கு பின்னர் இதுவரை இடம்பெற்ற எந்த ஜனாதிபதி தேர்தலிலும் முஸ்லிம் தலைமைகள் நிபந்தனையற்ற ஆதரவையே பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வழங்கி வருகின்றனர். அதற்காக முஸ்லிம் சமூகத்தை அவர்களின் சுயநல அரசியலுக்காக பயன்டுத்தி வந்திருக்கின்றனர். அந்த நிலையை மாற்றியமைக்கும் நோக்கத்திலே முஸ்லிம் சமூகம் சார்ப்பாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை போட்டியிடவைத்து அதற்கான தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை தயாரித்தோம். 

எமது கனவு எனும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதனை பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கையளித்து, அவர்களின் யார் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றாறோ அந்த வேட்பாளருக்கு எமது இரண்டாவது விருப்பு வாக்கை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் சஜித் பிரேமதாசவின் செயலாளராக செயற்படும் திஸ்ஸ அத்தநாயக்க, கோத்தாபய ராஜபக்~வின் செயலாளர் சாகல காரியவசம் ஆகியோருக்கு  கையளித்து கலந்துரையாடினோம். 

இரண்டு வேட்பாளர்களின் செயலாளர்களும் எமது தேரதல் விஞ்ஞாபனம் தொடர்பாக பரிசீலித்துப்பார்த்து அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர். என்றாலும் இதுவரை அவர்களில் யாரும் எந்த முடிவையும் எமக்கு அறிவிக்கவில்லை. அதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு ஆதரவளித்து, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு முதலாவது விருப்பு வாக்கை வழங்கவேண்டும் என்பதுடன் எந்த வேட்பாளரினால் சமூகத்துக்கு நன்மை கிட்டும் என சுயாதீனமான சிந்தித்து இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.

அத்துடன் எந்த வேட்பாளருக்கு முஸ்லிம் சமூகம் தனது இரண்டாவது தெரிவை வழங்கவேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இனிஒருபோதும் அறிவிக்கமாட்டார் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார்.

6 கருத்துரைகள்:

this group of guys trying to do the favor of Gotha and Mahinda team. whatever vote Hisbullah get that all supposed to fall to Sajith. by this act hisbullah and his team trying to divert the vote of sajith nothing else they trying to achieve.

முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் மிக நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருனம் இது. முஸ்லிம்கள் தமது பெறுமதியான வாக்குகளை ஹிஸ்புல்லாவுக்கு வழங்குவதால் எதுவம் நடக்கப்போவதில்லை.

முதலாவது ஓட்டை உங்களுக்கு தராமல் சரியான நபருக்கு கொடுத்தால் அது எவ்வளவு புத்தி கூர்மையான விடயமாக இருக்கும்.

Those who have read all the 1500 odd comments/rebuttals that "THE MUSLIM VOICE" has written since February 2015 till now in the www.jaffnamuslim.com, Ada Derana, Colombo Telegraph, Colombo Gazette, TKN, Veerakesari, Daily News, Lankaweb.com, Economy Next, Hiru News, Onlanka, Lanka Business online, Nation.lk, MadawalaNews - facebook and a few more publications, YOU WILL SEE THAT WHAT "THE MUSLIM VOICE" HAS WRITTEN IS TRUTH AND NOTHING BUT THE TRUTH, about our "deceptive Muslim politicians and leaders, Insha Allah. "THE MUSLIM VOICE" was slammed and attacked by these "DECEPTIVE/MUNAFIQUE" gangs throughout these 41/2 years. BUT TODAY - ALHAMDULILLAH, THE TREND HAS CHANGED AND THE UNDERSTANDING MUSLIM VOTE BANK HAS TURNED TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AT THE NOVEMBER 16th., PRESIDENTIAL ELECTIONS, THANKS TO MUSLIM LOYALISTS LIKE ALI SABRY, Insha Allah. THESE DECETIVE/MUNAFIQUE PERSONS/GROUPS HAVE ACCEPTED THE REALITY AND ARE ORGANIZING POLITICAL CAMPAIGN MEETINGS AND COMMUNITY MEETINGS TO SUPPORT GOTABAYA - ALHAMDULILLAH. THEY HAVE EVEN NOW STATRED TO APPEAR BEFORE TV CAMERAS AND SPEAK ON STAGES AT PUBLIC CAMPAIGN MEETINGS APPEALING TO THE MUSLIM VOTE BANK TO VOTE GOTABAYA. TO GOTABAYA, EVERY SINGLE SRI LANKAN VOTE IS VITAL AND "THE MUSLIM VOICE" IS HAPPY ABOUT IT, ALHAMDULILLAH. ACCORDING TO THE POLITICAL ANALYSIS CONDUCTED BY "THE MUSLIM VOICE" 30% (THIRTY PERCENTAGE) OF THE NEARLY 950,000 to 1 MILLION MUSLIMS VOTES WILL BE POLLED IN FAVOUR OF GOTABAYA RALAPAKSA, Insha Allah. This was published by "The Muslim Voice a few months ago.
What "The Muslim Voice" has been doing - "May All praise be to God AllMighty Allah, Alhamdulillah" is to kindle the aspirations and inspirations of the humble Muslim Ummah/Jamaath in Sri Lanka to rethink politically and otherwise in order it will help our community regain our "DIGNITY", "HONOUR", "RESPECT", "RIGHTS" and the STATUS OF "HIERA-UMMATH".
(Contd: below).

(Contd. from above).
The writing and wide political knowledge of "The Muslim Voice" belongs to God AllMighty Allah. "The Muslim Voice" is on a CRUSADE to expose the fraudulent, hypocritical, unscrupulous and dishonest corrupt Muslim Politicians of whom "The Muslim Voice" has much knowledge, by the grace of God AllMighty Allah and "HAD" a duty to challenge them as a "democratic institution" in a "Democratic Society", Insha Allah. The Convener of the Muslim Voice, "The Muslim Voice" had been blessed to mingle in the corridors of political power and witness the manner in which these fellows lead two lives, one in the mist of their creed and corrupt selfish and self centered political partners and the other how they show a different, God fearing, dedicated humanitarian character, behaving very religious and reminding "Insha Allah" or "Masaha Allah" at every turn they make to hoodwink the poor Muslim voters. The time has come that these tricksters have to be challenged and EXPOSED to Safe Guard the Rights and DIGNITY of the Sri Lanka Muslim UMMAH, Insha Allah. A new Muslim Political Culture that can create a New Political Force has to be born soon, Insha Allah, and that is the Political message that "The Muslim Voice" is trying to send out, Insha Allah. If this endeavour of "The Muslim Voice" is true, honest and sincere, then God AllMighty Allah will give success to this message to reach every nook and corner in Sri Lanka and abroad where Sri Lankan Muslims are living and to reach every Sri Lankan "Muslim Makkal", Insha Allah. Brother Ali Sabry and a few Mahinda/Gotabaya/Basil loyalist Muslims have called for this " MUSLIM POLITICAL CULTURE" Alhamdulillah. It had created a "TURNING POINT" in the Muslim community and vote bank. Majority of the Muslim vote bank will vote to make Gotabaya Rajapaksa the next President of Sri Lanka on November 16th., 2019, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

Many are day dreaming and would wake up on 17th with Sajith einning.hidbullah had been an opportunist throughout his career.

Post a Comment