Header Ads



200 கிலோ ஹெரோயின் காலியில் பிடிபட்டது - கடற்படை அதிரடி

(எம்.எப்.எம்,பஸீர்)

தெற்கு கடற் பரப்பில் 268.9992 கோடி ரூபா பெறுமதியான 224.166 கிலோ ஹெரோயின் போதைப் பொருளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

மீனவப் ஆழ் கடலில் மீனவப் படகொன்றிலிருந்து குறித்த  ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன்போது அப்படகில் இருந்த ஐவரும், அப்படகிலிருந்து கரைக்கு ஹெரோயின் தொகையை எடுத்துவர  அந்த நேரம்  மீனவப்படகை நெருங்கிய டிங்கிப் படகில் இருந்த  இருவருமாக 7 சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டதாக  கடற்படை ஊடகப் பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.  

பாகிஸ்தனைலிருந்து குறித்த போதைப் பொருள் எடுத்து வரப்பட்டுள்ளதாகவும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து மீனவப் படகுக்கு வேறு கப்பலில் இருந்து அந்த ஹெரோயின் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிகப்பதாகவும், இதனுடன் தொடர்புடைய அவ் வலையமைப்பின் இலங்கை பிரதி நிதிகளான மூன்று முக்கிய  சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் இன்று நண்பகல் பொலிஸ் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவும் கடற்படை பேச்சாளர்  லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டாரவும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்படி விடயங்களை வெளிப்படுத்தினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 7 நபர்களையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகு, டிங்கிப் படகு மற்றும் செய்மதி தொலைபேசி ஒன்று, 7 கையடக்கத் தொலைபேசிகள்,  ஜீ.பி.எஸ். உபகரணங்கள் மூன்று  போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.