November 09, 2019

1400 கோடியில் கட்டிய பல்கலைக்கழகத்தை ஒப்படையுங்கள் பணம் தருகின்றேன் என்றார் ஜனாதிபதி - அது முஸ்லிம் சமூகத்தின் சொத்து என்றேன்

98 பாதுகாப்பு காவலரண்களை சம்பந்தன் அகற்றினார். முஸ்லிம் தலைமைகள் ஒன்றையாவது அகற்றினார்களா என ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கேள்வியெழுப்பினார்.

கிண்ணியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“ஒரு அரசியல் தலைமைத்துவம் ஊரின் பொருளாதார, கல்வி மற்றும் கலாசார விடயங்களை சற்று சிந்திக்க வேண்டும், முஸ்லிம் தலைமைத்துவம் தற்போது எதனை நோக்கிச் செல்கின்றார்கள்.

இந்த சமூகத்தை பாதுகாத்து கல்வியில் முன்னேறிச் செல்ல வேண்டும், அதற்கு தலைமைத்துவம் உதவ வேண்டும்.

உயர்ந்த தொழில்நுட்ப துறைகளை ஏற்படுத்த வேண்டியதோடு, அதற்காக தான் 1400 கோடி ரூபா செலவில் கல்வித் துறையை மேம்படுத்த தான் நான் அந்த பல்கலைக்கழகத்தை கட்டியிருக்கின்றேன்.

அதனை யாரும் எடுக்கவும் பறிக்கவும் முடியாது. ஜனாதிபதி அதனை ஒப்படையுமாறும் கேட்டார். அதற்காக பணத்தினை தருகின்றேன் என்றார்.

நான் சொன்னேன் அது என்னுடைய சொத்து அல்ல, அது முஸ்லிம் சமூகத்தின் சொத்து என்றேன்.

ஜனாதிபதி தேர்தல் வந்தவுடன் முஸ்லிம் தலைமைகள் நான் கோத்தபாயவின் முகவர் என்று கூறி எனக்கெதிராக பொய்களை கூறித் திரிகின்றார்கள்.

இவர்கள் ஒன்றை விளங்க வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்காக நான் பல சேவைகளையும் பொறுப்புகளையும் செய்திருக்கின்றேன்.

ஆனால் பேரினவாதிகளின் பின்னால் இவர்கள் இருக்கின்றார்களே பதவிக்கும், தனது சொந்த சுயலாபத்திற்குமே என்றால் அது மிகையாகாது.

2008ம் ஆண்டு முதலாவது கிழக்கு மாகாண சபையில் ஹக்கீம் துரோகத் தனமான செயல்பாட்டினை மேற்கொண்டார். காரணம் முஸ்லிம் முதல் அமைச்சரை ஏற்படுத்துவோம் என்றேன்.

ஆனால் அவர் என்னுடைய கதைகளை கேட்காமல் துரோகத் தனமான வேளைகளில் ஈடுபட்டார். அதன் பின் தான் றிசாட் பதியுத்தினுடைய தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஏற்படுத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கே நடைபெறுவது தலை கிழாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நான் வெற்றி பெறுவேன் என்பது நிச்சயம் இல்லை. எனக்கு நூறு வாக்குகள் கிடைத்தாலும் சரிதான், பத்தாயிரம் வாக்குகள் கிடைத்தாலும் நான் தோல்வி தான்.

நான் போட்டியிடுவது ஜனாதிபதியை தீர்மானிப்பதற்கு தான் நான். நான் இந்த முஸ்லிம் சமூகத்தின் இரண்டரை இலட்சம் வாக்குகளை எதிர்பார்கின்றேன்.

அந்த வாக்குகளை எதிர்பார்த்தே நான் போட்டியிடுகின்றேன். எனது “நாளைய கனவு” என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டுகின்றேன்.

இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை ஓரளவேனும் நிவர்த்திக்கப்படும்” என கூறிளார்.

7 கருத்துரைகள்:

இந்த பூளூடா ஒன்றும் நடக்காது
இதை அரசாங்கம் கைப்பற்றி கிழக்கு பல்களைகறகத்துடன் இணைக்கபடல் வேண்டும்.

Ajan உம்முடைய கிழக்கு சமூகத்தவரின் அசல் உம்மால் நாற்றம் எடுக்கிறது.

நீ முஸ்லீம்கள் என்றால் மடயர்கள் சமுதாயம் என்று பூச்சுத்த வந்தால் இனிவேகாது உனதுதேவயக்கு உனது மகன்பெயரில் சவுதியின் தணவந்தருக்கு பூச்சுத்தி கட்டிய உனது பல்லைக்கழகம் எந்த சமுதாயத்திற்கு கட்டியதாக சுத்துகிராய்.

Ajan நீ இன்னும் குழந்தையாய் இருக்கிறாய்.நீ ஆதரவளிக்கும் வியாழேந்திரன்,கருணா போல் ஆட்கலால் hisbullah வை அசைக்க முடியாது.ரத்ன தேரோ Muslim களுக்கு எதிராக ஆர்ப்பாடம்,உண்ணாவிரதம் இருந்த போது அதிக சந்தோசப்பட்டவர்கலில் நீயும் ஒருவன்.சரி அஜன் நல்லா விளங்கு,எந்த ஆட்சி வந்தாலும் hisbullah வின் பழ்கலைக்கழகத்தை அசைக்க முடியாது.அடுத்தது கோத்தா ஆட்சிக்கு வந்தால் கிழக்கின் ராஜா hisbullah தான்.எனவே புல்டா விட்டு தமிழ் மக்களின் வாக்கை பெற தமிழ் மக்களை கிழக்கில் ஏமாற்றுவது யாரென் இனி நான் உமக்கு சொல்ல தேவையில்லை.உனக்கே தெரியும்.உமக்கு ஒரு சிறிய உதாரனம் hisbulla க்கு எதிராக UNP யில் இருக்கும் போது ஆடிய ரத்ன தேரோ தற்போது பொது ஜன பெரமுன பக்கம் போனதும் எப்படி அடங்கி விட்டார்.இதிலிருந்து அஜன் புரிந்து கொல் கிழக்கில் தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கு எடுப்பதற்காக சில முன்னாள் தமிழனின் துரோகிகள் மீண்டும் களமிரக்கபட்டுள்ளனர் இதை புரியாமல் நீர் இன்னும் அவர்களின் கருத்துகளுக்கு சபாக்ஷ் போடும் குழந்தையாய் இருக்கிராய்.அஜன் நீ பாவப்பட்ட அப்பாவிப்பா.

விதண்டாவாதம் பேசுபாவர்கள்.

தமிழருக்கு கிடைத்தவை மற்றும் கிடைக்கவிருப்பவை முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடாது.

தமிழருக்கு கிடைக்கதவைகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடாது.

முஸ்லிகளிடம் இருப்பவை தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

முஸ்லிம்களிடம் இல்லாதவைகளும் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும்.

Hisbullah is making stories to protect his investment.r u supporting a family dynasty because of your 1400 crores money.u said dambulla.mosque was not demolished.kattankudy people rejected you last time.worse fate this time

Post a Comment