Header Ads



யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம் வீதிகளுக்கு, முஸ்லிம் பெரியார்களின் பெயர்களை சூட்டிய மர்ஹூம் VMMS அபுஸாலி ஹாஜியார்

- பரீட் இக்பால் -

இஸ்லாமிய அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் வீதிகளுக்கு முஸ்லிம் பெரியார்களின் பெயர்களை சூட்டியவரும் காலத்திற்கு காலம் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அல்லல்படும் போது தானே மண்வெட்டி சுமந்து வீதி எங்கும் நடந்து திரிந்து வடிகால் வெட்டி மக்களுக்கு சேவை செய்தவர்தான் அபுஸாலி ஹாஜியார் ஆவார்.

யாழ்ப்பாணம் சோனகத் தெருவில் வாவா ஸாஹிப் மீரான் முஹிதீன் - நாச்சியா தம்பதியினருக்கு 1920 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி அபுஸாலி பிறந்தார்.

அபுஸாலி தனது ஆரம்பக் கல்வியை அல்லாபிச்சை பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும்; கற்றார். நகை வியாபாரியான அபுஸாலி 1940 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த யூசுப் - சுலைஹா தம்பதியினரின் மகள் நபீஸாவை திருமணம் செய்தார். அபுஸாலி – நபீஸா தம்பதியினருக்கு 10 பெண்பிள்ளைகளும் 4 ஆண் பிள்ளைகளும் (ஜ∴பர் ஜாதீக், ஸகாப், ஸரூக் பைஸல், நௌஷீத்) ஆவார்கள்.

அபுஸாலி ஹாஜியார் ஒரு சமாதான நீதவான் ஆவார். இவர் 1951 இல் யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து தனது 31 ஆவது வயதில் யாழ்.மாநகர சபை உறுப்பினரானார்.

அபுஸாலி ஹாஜியார் குளத்தடி சின்னக்குளம் அடிக்கடி வற்றுவதால் அதனை இறைத்து ஆழமாக்கும் பணியை மேற்கொண்டார்.இவர் நோன்பு காலங்களில் முஸ்லிம் வீதிகளில் மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களின் உதவியுடன் பகல் வெளிச்சம் போன்ற வெளிச்சத்தை மின்கம்பங்களுக்கு வெளிச்சம் கூடிய குமிழ்கள் இணைப்பை செய்வித்தார்.  

அபுஸாலி ஹாஐpயார் சமூகத்தின் பெரியார்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற தூர நோக்குள்ள சமூகம் சார்ந்த நற்சிந்தனை அடிப்படையில் சோனகத் தெருவிலுள்ள வீதிகளின் பழைய பெயர்களுக்கு பதிலாக புதிய பெயர்களான முஸ்லிம் பெரியார்களின் பெயர்களை சூட்டி பெயர் பலகைகளும் அமைத்து கொடுத்தார்.

பிச்சைக்குளம் வீPதியை சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி மந்திரி அபுல்கலாம் ஆஸாத் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆஸாத் வீதி என்றும் பிரப்பங்குளம் வீதியை சுதந்திர பாகிஸ்தானின் தந்தை முஹம்மது அலி ஐpன்னா ஞாபகார்த்தமாக ஐpன்னா வீதி என்றும் வேறு கலீபா அப்துல் காதர் வீதி,கலீபா அப்துல் ஹமீது வீதி, மீராப்பிள்ளை அவெனியு என்பதும் அபுஸாலி ஹாஐpயார் வீதிகளுக்கு இட்ட பெயராகும். 

அபுஸாலி ஹாஐpயார் க.பொ.த.பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களுக்கு பரிசில் வழங்கி பாராட்டி அவர்களை ஊக்குவிப்பார். மாணவர்களின் வாசிப்புத்திறன், தலைமைத்துவ பயிற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 'முஸ்லிம் சகோதரத்துவ சங்கம்' என்ற பெயரில் ஒரு வாசிகசாலையை நிறுவி நடாத்தியும் வந்தார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கிளிநொச்சியில் 15 பேருக்கு காணி பெற்று புறப்பட்ட போது அவர்களை ஐதுறூஸ் மகாம் பள்ளிவாசலில் இருந்து வழி அனுப்பிவைத்தார். மேலும் அபுஸாலி ஹாஐpயார் அயலிலுள்ள மாற்று மதத்தினர்களுடனும் நன்றாக நெருங்கி பழகினார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். குறிப்பாக நாவாந்துறை, கொட்டடி ,வெள்ளாந்நெரு, ஓட்டுமடம் போன்ற இடங்களில் காணப்பட்ட சில குறைகளையும் நிவர்த்தி செய்து அந்த மக்களின் இதயங்களிலும் இடம்பிடித்தார்.  

இவர் 1951 முதல் 1968 வரை யாழ் மாநகர சபை உறுப்பினராக இருந்து திறம்பட சேவையாற்றினார். யாழ்.மாநகரசபையில் இவர் சில வேளைகளில் பதில் மேயராகவும் கடமையாற்றியுள்ளார். இரு முறை பிரதி மேயராக கடமையாற்றியுள்ளார்.

1958 இல் யாழ்;ப்பாணம் கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற சத்தியாக் கிரகத்தின் போது அங்கு கூடியிருந்த மக்களை இராணுவம் தாக்க முற்பட்ட போது அபுஸாலி ஹாஐpயார் துருக்கித்தொப்பியுடன் வீதியின் குறுக்கே படுத்து இராணுவத்தின் வருகையை தடுத்தார். இதன் மூலம் தமிழர்களின் இதயத்தில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

தன்னலமற்ற சேவைகளையும் சாதனைகளையும் புரிந்த அபுஸாலி ஹாஐpயார். 52 வயது கடந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி இறையடி எய்தினார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஐpஊன் அன்னார் nஐன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன். 

No comments

Powered by Blogger.