Header Ads



ஓய்வுக்குபின் மைத்திரிக்கு சலுகைகள் - கண்டிக்கிறது JVP

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஓய்வூதியத்துக்கு பின்னர் வழங்கப்படவுள்ள சலுகைகளுக்கு ஜே.வி. பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் நேரத்தில் இந்த சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக ஜேவிபி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹேரத், பொது நிதியை பெருமளவில் வீணாக்கும் செயற்பாட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.

அமைச்சரவை அளித்துள்ள அனுமதியில் , மைத்திரி தற்போது கொழும்பில் பயன்படுத்தும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதும், விசேட அதிரடிப்படையினர் அவருக்கு பாதுகாப்பு அளிப்பதுவும் அடங்கும்.

அமைச்சரவை ஒப்புதல் அளிப்பதற்கானஅமைச்சரவைப் பத்திரத்தை இந்த மாத தொடக்கத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இலங்கை வரலாற்றிலியே மிகவும் தரித்திரியம் பிடித்த முடுமை நிறைந்த கேவலமான ஜனாதிபதி இவர்தான்

    ReplyDelete
  2. It is a wasting money and resource for this man from public fund!

    ReplyDelete

Powered by Blogger.