Header Ads



கொழும்பு பள்­ளி­வா­சல்­களில் நடைபெறும், குத்பாக்களை நெறிப்படுத்தப் போவது யார்...?

- ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் -

இலங்கை முஸ்லிம் சமூ­கத்தின் தலை­மைகள், புத்­தி­ஜீ­விகள், கல்­வி­மான்கள், துறை­சார்ந்த ஆளு­மைகள் அதிகம் வாழும், வரும் இட­மாக கொழும்பு நகரம் உள்­ளது. இலங்கை முஸ்லிம் சனத்­தொ­கையில் கொழும்பு மாவட்­டத்தில் சுமார் 2,25000 முஸ்­லிம்­களும், மத்­திய கொழும்பில் சுமார் 1,50000 முஸ்­லிம்­களும் வாழ்­கின்­றனர். 

நாட்டின் அனைத்து ஊர்­க­ளிலும் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பு நக­ருக்கு வரும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் உள்­ளனர். இவர்­களின் கணி­ச­மான ஒரு­தொ­கை­யினர் நாளாந்தம் தமது வீடு­க­ளுக்கு செல்­கின்­றனர். மற்றும் வாராந்தம் தமது ஊர்­க­ளுக்கு செல்­கின்­ற­வர்­களும் அதி­க­மாக இருக்­கின்­றனர். அத்­துடன் கல்வி நோக்­கத்­திற்­காக கொழும்பு நகர் வந்து அங்­கேயே தங்கி வாழும் பலரும் இவர்­களில் உள்­ளனர்.

இவர்­களில் அதி­க­மானோர் முஸ்லிம் சமூ­கத்தின் முன்­னோ­டி­க­ளாக இருப்­ப­வர்கள்; இருக்க வேண்­டி­ய­வர்கள். கருத்து, நிலைப்­பா­டு­களை உரு­வாக்­குவோர். சமூக மேம்­பாட்­டுக்கும் நாட்டு நல­னுக்கும் உழைக்கும் திறன் கொண்­ட­வர்கள்.

தனிப்­பட்ட வாழ்வு, குடும்ப வாழ்வு, தொழில் வாழ்க்கை, சமூகப் பணி என்ற பரப்­பு­களில் எவ்­வாறு சம­நி­லை­யுடன் வாழ்­வது, ஒன்றை ஒன்று மிகைக்­காமல் எவ்­வாறு ஒவ்­வொரு பகு­திக்கும் உரிய இடத்தைக் கொடுத்து வாழ்­வது என்­பது ஒவ்­வொ­ரு­வரும் அறிந்து செயற்­பட வேண்­டிய அம்­ச­மாகும்.

இது­வி­ட­யத்தில் இவர்கள் வழி­காட்­டப்­ப­டு­கி­றார்­களா என்ற கேள்வி உள்­ளது. இவர்கள் விட­யத்தில் முஸ்லிம் நிறு­வ­னங்கள், அமைப்­புகள் உரிய முறையில் கவனம் செலுத்­து­கின்­றதா என்ற கேள்­வியும் உள்­ளது.

இத்­த­கையோர் இஸ்­லாத்தின் பரந்த, விரிந்த தெளி­வு­களை பெற்­றுக்­கொள்ளும் சந்­தர்ப்­பங்கள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன. ஒரு­சிலர் சுய­மாக நூல்­களை வாசித்து தம்மை வளர்த்துக் கொள்­வார்கள். ஆனால் அதி­க­மானோர் இந்­நி­லையில் இருக்க மாட்­டார்கள்.

இன்று இஸ்லாம் தொடர்­பாக பல சந்­தே­கங்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. அரச அலு­வ­ல­கங்­களில் பணி­பு­ரியும் முஸ்­லிம்­க­ளிடம் இது தொடர்பில் சகோ­தர சமூ­கத்தை சேர்ந்­த­வர்கள் பல கேள்­வி­களை எழுப்­பு­கின்­றனர். ஆனால் இவை­பற்­றிய விடை தெரி­யாது மௌன­மாக இருக்கும் பலர் அங்­குள்­ளனர். அதே­நேரம் அரை­கு­றை­யாகப் பதில் கொடுத்து சங்­க­டப்­படும் பலரும் அவர்­க­ளுக்கு மத்­தியில் உள்­ளனர். மிகச் சொற்­ப­மா­ன­வர்­களே தெளி­வுடன் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு விளக்கம் கொடுக்­கின்­றனர்.

இந்த இடத்தில் அனைத்து முஸ்­லிம்­களும் ஒன்­று­சேரும் வாராந்த ஜும்­ஆக்கள் முக்­கியம் பெறு­கின்­றன. முஸ்­லிம்­களை அறி­வூட்டித், தரப்­ப­டுத்தும் குத்­பாக்­க­ளாக எமது குத்­பாக்கள் காணப்­பட வேண்டும். அதிலும் கொழும்பு நகர பள்­ளி­வா­சல்­களின் குத்­பாக்கள் இருக்க வேண்டும். ஆனால், இத்­த­கைய பின்­ன­ணியில் குத்­பாக்கள் இடம்­பெ­று­வ­தில்லை என்­பதே உண்மை. கால, சூழல் மாற்­றங்­க­ளுக்­கேற்ப குத்­பாக்கள் நடை­பெ­று­வது மிகவும் குறைவு.

கொழும்பு நகரப் பள்­ளி­வா­சல்­களில் இடம்­பெறும் குத்­பாக்கள் தொடர்பில் பின்­வரும் அவ­தா­னங்கள் உள்­ளன.

* இல­கு­வாக புரிந்து கொள்­ளக்­கூ­டிய மொழியில் குத்­பாக்கள் இடம்­பெ­றாமை. கதீப்­களின் மொழிப் பிரச்­சினை இதற்கு முக்­கிய கார­ண­மாகும். வாசிப்புப் பழக்­கத்­தி­லுள்ள பல­வீனம், நவீன மொழி பற்­றிய குறைந்த பரிச்­சயம் இதற்கு சில கார­ணங்­க­ளாக இருக்­கலாம்.

* கால மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப தலைப்­புக்கள் இல்­லாமை. நாட்டு நிலை­மைகள், உலகில் நடக்கும் மாற்­றங்கள், இதற்குப் பின்னால் காணப்­படும் சர்­வ­தே­சிய சக்­திகள் பற்­றிய போதிய தெளி­வின்மை இதற்கு கார­ணங்­க­ளாக இருக்­கலாம். இதனால் எடுத்த அனைத்­திற்கும் இது யூத, நஸா­ராக்­களின் திட்டம் என்று சொல்­லக்­கூ­டிய வார்த்­தை­களை அதிகம் செவி­ம­டுக்­கின்றோம்.

* ஒரு தலைப்பில் குத்­பாவை நிகழ்த்­தாமல் சித­றிய அமைப்பில் குத்­பாக்கள் உள்­ளமை. முடி­வாக கதீப் சொல்ல வரும் கருத்தை கிர­கிக்க முடி­யா­துள்­ளமை.

* அச்­ச­மூட்டி எச்­ச­ரிக்கை செய்­வதில் காட்டும் ஆர்வம், சுப­சோ­பனம் கூறு­வதில் இல்­லாமை. எச்­ச­ரிக்கை செய்­வது, தண்­ட­னைகள் பற்றி விரி­வாகப் பேசு­வது சில கதீப்­களின் பண்­பாக மாறி­யுள்­ளது.

* இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிர­ம­மா­னது என்ற மனப்­ப­திவை கொடுக்கும் வார்த்­தை­களே அதிகம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றன. அதன் இல­குத்­தன்­மை­யுடன் சேர்த்து இஸ்­லாத்தை முன்­வைப்­பது அரி­தா­கி­விட்­டது. இத­னால்தான் மிகத் தெளி­வாக ஹரா­மில்­லாத பல விட­யங்­க­ளையும் ஹராம் என்று கூறும் கதீப்­களை மிம்­பர்­களில் காண்­கின்றோம்.

* அதி­க­மான குத்­பாக்கள் கேட்­க­மு­டி­யா­த­ளவு உரத்த குரலில் நிகழ்த்­தப்­ப­டு­கின்­றன. இது எமது மர­பா­கவும் மாறி­யுள்­ளது. ஆக்­ரோ­ஷ­மில்­லாமல், அமை­தி­யாக, உள்­ளத்­துடன் உற­வாடும் குத்­பாக்­களை கேட்­பது மிகவும் குறை­வா­கவே உள்­ளது.

* சமூ­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னைகள், முதன்மை கொடுக்­கப்­பட வேண்­டிய அம்­சங்கள், அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்­டிய அம்­சங்­களை மையப்­ப­டுத்­திய குத்­பாக்கள் மிகவும் குறைவு. கருத்து வேறு­பா­டுள்ள, கிளை அம்­சங்­க­ளில்தான் அதி­க­மான குத்­பாக்கள் இடம்­பெ­று­கின்­றன.

இதனால் குத்­பாக்­களின் உயி­ரோட்டம், பயன் குறை­வ­டைந்து செல்­கின்­றது. சமூ­கத்தை ஒற்­று­மைப்­ப­டுத்த வேண்­டிய குத்­பாக்கள், சில­போது சமூ­கத்­துக்கு மத்­தியில் பிள­வையும், பிடி­வா­தத்­தையும் அதி­க­ரித்­துள்­ளது.

இதன் கருத்து அனைத்து குத்­பாக்­களும் தரம் குறைந்­தது என்­ப­தல்ல. தர­மா­கவும், கால சூழல் மாற்­றங்­களைக் கருத்திற் கொண்டு நிகழ்த்­தப்­படும் குத்­பாக்­களும் கொழும்பு நகர்ப் பள்­ளி­வா­சல்­களில் உள்­ளன. இத்­த­கைய குத்­பாக்­களை நாடிச் செல்லும் மக்­களும் உள்­ளனர். ஆனால் இது­போன்ற குத்­பாக்கள் குறை­வாக உள்­ளன என்­பதே இங்கு சொல்­ல­வரும் கருத்­தாகும்.

எனவே மிம்­பர்­களைப் பயன்­ப­டுத்தும் உல­மாக்கள் அதன் அமா­னி­தங்­களைக் கவ­னத்தில் எடுக்க வேண்டும். அதற்குத் தகு­தி­யா­ன­வர்­க­ளாக தம்மை மாற்றிக் கொள்ள தொட­ராக தயா­ராக வேண்டும்.

மிம்­பர்கள் கருத்­து­ரு­வாக்கம் நடை­பெறும், சிந்­த­னை­களைப் புடம்­போடும் இடங்­க­ளாகும். கால மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப எப்­படி சமூகம் வாழ வேண்டும், தமது அடிப்­படைப் பிரச்­சி­னைகள் எவை, எங்கு விட்டுக் கொடுக்­கலாம், விட்டுக் கொடுக்க முடி­யாத இடங்கள் எவை, தமது இருப்­புடன் தொடர்­பான அம்­சங்கள் யாவை போன்ற பல்­வேறு விட­யங்­களில் சமூகம் வழி­காட்­டப்­பட வேண்டும். மனி­த­னாக வாழும் நாம் எப்­படி பிற சமூ­கங்­க­ளுடன் வாழ வேண்டும். மனிதம் என்ற அடிப்படையில் இந்த நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பு எவ்வாறு அமையலாம் போன்ற அம்சங்கள் முக்கியமானவை.
கதீப்களை தயார்படுத்துவற்கான நிறுவனங்கள் காணப்பட வேண்டும்.

முன்வைப்புத் திறன், தலைப்புக்களைத் தெரிவு செய்தல் ஆற்றல், மொழியாற்றலை மேம்படுத்தல், உளவியல் மற்றும் உலக நடப்புக்களை அறிதல் போன்ற பல்வேறு அம்சங்களைப் போதித்து, திறன்விருத்தியைக் கொடுக்கும் வகையில் இந்நிறுவனங்கள் செயற்பட வேண்டும்.

இதன் மூலம் பயனுள்ள குத்பாக்களை மிம்பர்களில் செவிமடுக்கலாம். முஸ்லிம் சமூகத்தை அறிவு, ஆன்மீக ரீதியாக தயார்படுத்தலாம். இது பற்றி சிந்திப்போமாக.

5 comments:

  1. அதிலும் துவேசமா? ஏன் கொழும்பு கொத்பாக்கள் பற்றி பேசுகின்றீர்கள். வௌியூர் மத்திய, சப்ரகமுவ, தென் மாகாணங்கள் போய் பாருங்கள். ஒரு பக்கம் பயங்கர தமிழ் மொழியைப் படுகொலை செய்கிறார்கள். கௌரவ தோற்றம் உடைய வௌியூர் ஒருவர் வந்து தொண்டை கிழியக் கத்திவிட்டு சுடசுட தொழுகை நடாத்தி விட்டு ஓடுகிறார்கள். அந்த அரை மணிநேரத்தில் நாம் படும்பாடு அந்த ரப்புக்குத்தான் தெரியும். காதுவலி, இரண்டு காதுகளையும் மூடமுடியாது. மூடினால் தலைசரியில்லை என அக்கம் பக்கம் சொல்லுமோ என்ற அச்சம். இந்த படுமோசமான நிலைமையை மாற்ற இந்த உம்மத் உடனடியாகத் தயாராவிலலை என்றால் விளைவு அறிவும் தூர சிந்தனையும் அற்ற எருமை ஸஹ்ரான்கள் இன்னும் இன்னும் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.

    ReplyDelete
  2. Colombo district Muslim population is 283000(@ 2012)and it's more than 300000 at present,also there are 112 registered mosques in Colombo district.

    ReplyDelete
  3. if you want listen all Jummah Bayan important city of Sri Lanka please log SLHUB or SLBAYAN you will came to know the Jummah schedule and ulamas list.

    ReplyDelete
  4. Why import outside Ulemas to Fridays when the Permanent imam is there.This shall be stopped.

    ReplyDelete

Powered by Blogger.