Header Ads



அநுரகுமார வழங்கியுள்ள விளக்கம் (கோட்டபய கைது தொடர்பில் சட்டமா அதிபரிடம் வலியுறுத்தல்)

சட்டமா அதிபர் திணைக்கள முன்னாள் அதிகாரி ஒருவர் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் ..
அதைப் பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன்.
ஜனவரி 08, 2015 அன்றுஅரசாங்கத்தை தோற்கடித்த போது மக்களின் முக்கிய கோரிக்கை என்ன? 
முக்கிய கோரிக்கை என்ன …!
மோசடி செய்தவர்களை தண்டிப்பதாகவும், மோசடி செய்யப்பட்டுள்ள சொத்துகளை அரசாங்கம் கையகப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
2015 ஜனாதிபதித் தேர்தலில் அதிகம் திருட்டு மோசடி பற்றி பேசப்பட்டது.
ஆனால் தினந்தோறும் அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை.
அவற்றை முறையாக உரிய அரச நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இந்த [பொறுப்பான அரச நிறுவனங்கள் யாவை?
இதெற்கென இரண்டு அரச நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ள.
ஒன்று FCID. (FCID - போலீஸ் நிதி குற்றவியல் விசாரணை பிரிவு)
மற்றொன்று லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைகுழு .
குற்றப் புலனாய்வுத் துறை
யாரும் இந்த அமைப்புகளில் முறைப்பாடு செய்யலாம்.
முறைப்பாடு இல்லாமல் நீங்கள் விசாரிக்க முடியாது.
முதல் படி என்ன?
முறைப்பாடு செய்ய வேண்டும்.
மோசடி தொடர்பான முறைப்பாடுகள் செய்வதற்கு வசதியான வழி என்ன ?
புதிய அமைச்சரிடம் அனைத்து கோப்புகளும் உள்ளன.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சராக இருந்த போது வீடமைப்பு அமைச்சில் நடந்த மோசடி தொடர்பாக அமைச்சர் விமல் வீரவன்சாவுக்கு எதிரான தகவல்களை புதிய அமைச்சர் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். சஜித் பிரேமதாச அதற்கான புதிய அமைச்சர் 
அவரிடம் எல்லா கோப்புகளும் உள்ளன.
இருப்பினும், ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் யாரும் இது தொடர்பாக முறைப்பாடு செய்யவில்லை அதை நினைவில் கொள்ளுங்கள்.
இருப்பினும், தோழர் வசந்தா சமரசிங்க உட்பட எங்கள் கட்சி லஞ்சம் ஆணைக்குழு மற்றும் எஃப்.சி.ஐ.டி.க்கு 130 மேற்பட்ட முறைப்பாடுகளை தாக்கல் செய்தது. மொத்தம் 130 மோசடிகளைப் பார்த்தால், ஒரு வருடத்தில் திறைசேரி பெரும் பணம் அவ்வளவுதான். சராசரியாக, திறைசேரிக்கு ஆண்டுக்கு ரூ. 2000 பில்லியன் கிடைக்கிறது. இரண்டு டிரில்லியன் ரூபாய்.
இதே போன்ற பல மோசடிகள் நடந்துள்ளன.
அதேபோல் மிக் போர் விமானங்கள் குறித்து புகார் அளித்தோம்.
மெதமுலன டி.எ ராஜபக்ஸ நினைவு மண்டபம் அமைப்பதற்கு நாட்டு மக்களின் பணம் செலவழிக்க பட்டுள்ளது என்று நாங்கள் முறைப்பாடு செய்தோம். ஹெலியோகார்ப், ஹையர் ஹோட்டல் போன்ற 130 புகார்களை நாங்கள் கொடுத்துள்ளோம் .
இப்போது என்ன செய்வது?
முறைப்பாடுகளை கவனிக்க வேண்டும்.
அப்போது எங்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.
எங்கள் புகார்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை.
இந்த புகார்கள் குறித்து பொலிஸ்மா அதிபரிடம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று நாங்கள் கூறினோம்.
அவர் FCID க்கு இதனை அனுப்பியுள்ளதாக கூறினர்.
அந்த முறைப்பாடுகள் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த புகார்கள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதை சட்டமா அதிபர்திணைக்களம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாகத்தான் வழக்குத் தொடரப்படுகின்றது .
எனவே இந்த புகார்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்க்க இந்த குழுக்களுடன் நாங்கள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.
சரியா தவறா? 
முறைப்பாடுகளை செய்துவிட்டு காத்திருந்தோம் ?
நாங்கள் அளித்த முறைபாடுகளுக்கு என்ன என்ன நடந்தது என்பதைப் விசாரித்தோம்.
நாங்கள் விசாரித்த அந்த விடயங்களை பற்றிதான் முன்னாள் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் தலைவர் கூறுகின்றார்.
நான் உங்களிடம் கேட்கிறேன். என்ன நடந்தது என்று கேட்டு அறிந்துகொள்வது தவறா?
அளித்த முறைபாடுகளுக்கு என்ன நடக்கிறது என்பதை விசாரிக்க உரிமை உண்டு.
அந்த கலந்துரையாடலில் நாங்கள் பங்கேற்றோம்.
ஆனால் இந்த முறைப்பாடுகளின் போது இரண்டு விஷயங்கள் செயல்பட்டன.
ஒன்று, அரச சொத்துகளை மோசடி செய்தவர்களுக்கு நிறைய பணம் இருந்தது.
அந்த செல்வத்தின் மூலம் விசாரணை அதிகாரிகளை விலைக்கு வாங்கினர்.
அதே போல் அரசியல்வாதிகள் சட்ட மா திணைக்களத்தில் உள்ள சில திகாரிகளும் வாங்கப்பட்டனர்.
இங்கு ஊழல் மோசடிகளை மறைப்பதற்கு பணம் பயன்படுத்தப்படுகிறது.
மற்றொன்று ...
சில மோசடி காரர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.
சில மோசடி செய்பவர்களுக்கு ரனில் விக்கிரமசிங்க அரசியல் தஞ்சம் வழங்கினார், மற்றும் சில மோசடி காரர்களின் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் திரும்பப் பெறுவது தொடர்பான விசாரணையை முற்றிலுமாக மந்தகதியில் நடைபெற்றது.
ஆனால் நாங்கள் ஒரு அரசியல் இயக்கமாக, மோசடி செய்பவர்களைத் தண்டிக்கவும், சொத்தை திரும்பப் பெறவும் எங்களால் முடிந்தவரை முயன்றோம்.
இப்போது, என் சகோதரர் ஒருவர் கேட்டார் ... இதை மீண்டும் செய்வீர்களா?
ஆமாம். தேசிய சக்தி படையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் நம் நாட்டில் மோசடி செய்பவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் மற்றும் திருடப்பட்ட சொத்தை மீட்டெடுக்க முடியும்.

anura kumara dissanayake

No comments

Powered by Blogger.