October 06, 2019

ஹக்கீமுக்கும், ஹரீசுக்கும் ஒரு பகிரங்க மடல்

- முஹம்மது நயீம் ஆதம்பாவா -

சாய்ந்தமருத்துக்கான தனி நகரசபைக்கோரிக்கை  எவ்வளவு நியாயமானதென்பதனை இவ்வூர் மக்கள் மாத்திரமல்லாது ஏனைய சகோதர ஊர்மக்களும் உணராமலில்லை, இத்தேவைக்கான முதற்க்காரணமே இம்மக்கள் காலகாலமாக வியாபாரத்தில், அரசியல் அதிகாரத்தில், அபிவிருத்தியில் ஒப்பீட்டுரீதியாக புறக்கணிக்கப்பட்டதாகும், மேலும் தங்கெளுக்கென தனி அரசியலதிகாரம் கிடைக்கும், தங்களூர் அபிவிருத்தி யினை தாங்களே தீர்மானிக்கலாம், தனிநகர சபையென்கின்ற போது அரசிடமிருந்து தனி நிதியொதுக்கீடு கிடைக்கும், தங்கள் வரியினை தாங்களே தீர்மானித்து தாங்களே செலவிடலாம், மற்றும் தங்களூர் கொந்தராத்துக்களை தாங்களே நிர்வகிக்கலாம் இதன்மூலம் இவ்வூரின் சுதந்திர அபிவிருத்திக்கு யாரும் தடையாக இருக்கமுடியாது என்பன இதன் பின்னணி அம்சங்களாகும். இதற்காக இம்மக்கள் பலதடவைகள் பல ஆண்டுகாலமாக அரசியலதிகாரமுள்ளவர்களிடமும் அரசியல் அதிகார எதிர்பார்ப்பு உள்ளவர்களிடமும்  நீதிமன்றுகளிடமும் இக்கோரிக்கையை முன்வைத்து கெஞ்சி அழுது அதட்டி வருவதும் பல வாக்குறுதிகளோடு நின்றுவிடுவதும் இதனைக்கண்டும் காணாததுபோல் அரசுகள் நடந்து வருவதும் யாவரும் அறிந்ததே.

அதேநேரம் இம்மக்களை மேலும் இப்பிரச்சினையூடாக பிரதான முஸ்லீம் அரசியல் நீரோட்ட்டத்திலிருந்தும்  கட்சிகளிடமிருந்து பிரித்து அரசியல் ரீதியாகத் துண்டாடி அரசியல் நாகரீகம் தெரியாத அரசியல் வாதிகள் போன்று ஒரு சதத்திட்கும் பெறுமதியில்லாமல் இவர்களை செய்வதும், இதன் பின்னால் பல அரசியல் சதிநாடகங்கள் அரங்கேறுவதும் இவ்வூரில் வசிக்கும் சாதாரண அப்பாவி மக்களுக்கு தெரியவர வாய்ப்பில்லை. மாறாக இவ்வூரில் பிறந்த படித்த மக்கள், முன்னணி தொழிலதிபர்கள் மேலும் சிந்திக்கும் மக்களென ஒன்றுசேர்ந்து இப்பிரச்சினை தவறான வழிக்குச்செல்லாது இதனை முன்னணி அரசியல் அதிகாரம் கொண்டவர்களிடம் பேசித்தீர்ப்பது காலத்தின் தேவையாகும், அத்துடன் இதனைச்சாக்காக வைத்து இன்னும் யாரிடமிருந்தும் வாக்குறுதிகளுக்குப் பலியாகிவிடாது பாதுகாப்பது நம்மொவ்வொருவர் மீதுமுள்ள கடமையாகும், 

சாய்ந்தமருது பள்ளிவாயில் தலைவர் அவர்களே, நீங்கள் இப்பிரச்ச்சினை யினையை வென்றெடுக்க முயற்சிப்பதை பாராட்டவேண்டும் அதேநேரம்   தயவுசெய்து இதைவிடப்பெரிய மீளமுடியாத பிரச்ச்சினை சாபத்திற்கு இம்மக்களை இட்டுச்சென்றுவிடாதீர்கள்,  உங்களிடம் நிதானம் தேவை உங்கள் நடவடிக்கையில் சிந்தனை அவசியம், மக்கள் சந்தேகிக்காதவகையில் தீர்மானம்கள் வெளிப்படையாக நடப்பதை உறுதிசெய்யவேண்டும். இல்லாவிடில் அரசியலுக்கோ அல்லது பணத்திர்ட்கோ பதவிக்கோ உடன்படாத ஒரு நிதானமான சிந்தனையுள்ள குழுவிடம் இப்பொறுப்பைகையளியுங்கள்.  பா. உ. ஹரீஸ் ஆதரவளிப்பதர்ட்க்கு மாறாக வாக்களிப்போம் என்பது சமூக அரசியல் சிந்தனையில்லாத பேச்சு, சாய்ந்தமருதினை அதாவுல்லாவுக்கும் கோத்தபாயாவுக்கும் தாரைவார்ப்பதற்கான ஆயத்தமாகத்தான் இதனை கொள்ளவேண்டும்.  மேலும் இதனை சமூக சிந்தனையுள்ள முஸ்லிம்கள் ஏற்கமாட்டார்கள். அதிலும் குறிப்பாக தேசியம் முஸ்லீம் நீரோட்டத்திலிருந்து சாய்ந்தமருது முஸ்லிம்களென தனி வியாக்கியானம் கொடுக்கும்  இவ்வணுகுமுறை எதிர்காலத்தில் எண்களைத் தனிமைப்படுத்திவிடுவதோடு,  தேசிய சமூக சிந்தனையிலிருந்து வேறுபடுத்திவிடும்.       

கௌரவ ஹரீஸ் அவர்களே, நீங்கள் சாய்ந்தமருதிட்கும்தான் பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை மறந்துவிடும் ஒவ்வொரு கணமும் அவர்கள் உங்களைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவர். உங்களுக்குமுன் கல்முனைக்குப்பல பாராளுமன்ற உறுப்பினர்களிருந்திருக்கின்றனர், கௌரவ எம் எஸ் காரியப்பர், எம் சி அஹமட், அமைச்சர் மன்சூர், தலைவர் அஸ்ரப் என நாமறிந்தவர்கள், இவர்கள் காலங்களிலும் இப்பிரச்சினையிருந்தது இவர்களது ஆளுமையினால் சாய்ந்தமருதினை அரவணைத்துச்சென்ற காரணங்களினால் இக்கோரிக்கை பிர்ட்போடப்பட்டு வந்திருக்கின்றது. இனியும் இதனை பின்தள்ளிப்போடுவது நாகரீகமானசெயலல்ல, கௌரவ ஹரீஸ் அவர்களே உங்களை   தனிப்பட்டமுறையில் நன்கறிந்தவன் நான், நீங்களொரு ஊர்வாத சிந்தனையுள்ளவரல்ல, அதேநேரம் நீங்கள் ஒருசில வாக்கிக்காக அவ்வாறான படிப்பறிவு பகுத்தறிவு இல்லாதவர்களது கைதியாகிவிடக்கூடாது, நீங்கள் அவர்களை நெறிப்படுத்தவேண்டும் வழிநடத்தவேண்டும் அவர்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது.  கல்முனைக்குடி என்பதும் சாய்ந்தமருதென்பதும் ஒரு ஊரிலிருந்து சென்றவர்கள்தான் என்பது சரித்திரத்தினைப்புரட்டினால் தெரியும், மக்கள் தலைவனுக்கும் மக்கள் பிரதிநிதிக்குமான வேறுபாட்டினை நீங்கள் புரிந்து எல்லா ஊர்களையும் அணைத்துச்செல்லக்கூடிய தலைவனாக முன்னேறவேண்டும், பிரதிநிதியென தபால் வேலைசெய்யும் காலமல்ல இது, முழுசமூகமுமே தன் பாதுகாப்பினைத்தேடிநிட்கின்றது.  காலம் செல்லச்செல்ல சனத்தொகை அதிகரிக்க மக்களது தேவைகள் அதிகரிக்கும், தேவைகள் அதிகரிக்கும்போது அதிகாரம் பங்கிடப்படவேண்டும், உங்கள் தந்தை தனது பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதிக்கொடுக்காமல் விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? வறட்டு பிடிவாதங்கள் ஊர்களைப்பிரித்துவிடும் அப்பழி ஏத்தலைமுறைபோயினும் அழியாது, அது உங்களுக்குத் தேவையில்லை. 

கௌரவ தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களே, இந்தப்பிரச்சினையில் உங்கள் பாத்திரம் தானென்ன, ஹரீஸ் தீர்வினைக்கொண்டுவரும்வரையில் நீங்கள் காத்துக்கொண்டிருக்கின்ரீர்களா, அல்லது இந்தஊரினை முஸ்லீம் காங்கிரசிலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டடீர்களா?  அவர்களது கோரிக்கை நியாயமாக உங்களுக்குப்படவில்லையா, அவர்கள் கேட்பது அவர்களுக்கென ஒரு நகர சபைதானே, ஏன் இம்மக்களுக்கு வாக்குறுதிகளைக்கொடுத்தீர்கள்.  நீங்கள் இன்னும் முழு முஸ்லீம் சமூகத்திர்ட்கும் இந்த முஸ்லீம் காங்கிரஸ் சொந்தமென நினைத்தால் தயவுசெய்து அரசியல் ரீதியாக இம்மக்கள் பிரிந்துசெல்லவிடாது ஹரீஸுடன் சேர்ந்து இப்பிரச்சினையைக்கு ஒரு நிரந்தர தீர்வினைப்பெற்றுக்கொடுங்கள் உங்கள் தலைமைத்துவத்தை நிரூபியுங்கள் - நம்மெல்லோருக்கும் இறைவன் வழிகாட்டவேண்டும்  

0 கருத்துரைகள்:

Post a Comment