October 23, 2019

சஜித்தை ஆத­ரி­யுங்கள் என்றார் ரணில், முதலில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுங்கள் என்றார் சம்­பந்தன்

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பிர­தான  தமிழ் கட்­சி­களின் ஆத­ரவு தமக்கு வேண்டும் என்றும்  தமிழ்க் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலில் தமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமிழர் தரப்­புடன்  சகல விதத்­திலும் பேச்­சு­வார்த்தை நடத்தி ஒரு பொது இணைக்­கப்­பாட்டை எட்ட தய­ாராக இருப்­ப­தா­கவும் பிர­தமர்  தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த சம்­பந்தன், தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு உள்­ள­டக்­கிய  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெளி­யி­டுங்கள். அதன் பின்னர்  நாம் தீர்­மானம் எடுக்­கின்றோம் என தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்கள் மும்­மு­ர­மாக  இடம்­பெற்று வரு­கின்ற நிலையில்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்டை இன்­னமும் அறி­விக்­கா­துள்­ளது. இந்­நி­லையில் பிர­தான ஐந்து தமிழ் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து முன்­வைத்­துள்ள 13 அம்சக் கோரிக்­கை­களை முன்­னி­லைப்­ப­டுத்தி தமிழர் அர­சியல் கட்­சிகள் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மற்றும் சுமந்­திரன் எம்.பி ஆகியோர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அழைப்­பை­ய­டுத்து நேற்று முன்­தினம் மாலை அவரை சந்­தித்து பேச்­சி­யி­ருந்­தனர்.

  சம்­பந்தன், சுமந்­திரன் இரு­வ­ருடன் பிர­தமர் தனிப்­பட்ட ரீதியில் இந்த சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். இந்­நி­லையில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட வடக்கு கிழக்கின் தமிழ் கட்­சிகள் இம்­முறை எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு தமது ஆத­ரவை வழங்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கின் தமிழ் கட்­சி­களின் ஆத­ரவை தாம் எப்­போதும் எதிர்­பார்த்து செயற்­ப­டு­வ­தா­கவும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

அத்­துடன் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் கட்­சி­க­ளுடன் எப்­போதும் சகல வித­மான பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்க தாம் தய­ராக உள்­ள­தா­கவும் பொது­வான இணக்­கப்­பாடு ஒன்­றினை நாம் முன்­னெ­டுக்க முடியும் எனவும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னிடம் கூறி­யுள்­ள­துடன் சஜித் பிரே­ம­தா­சவை ஆத­ரிக்க வேண்டும் என்றும்  வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

எனினும் இதற்கு பதில் தெரி­வித்த சம்­பந்தன்,

தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வழங்­கு­வ­தாக ஆரம்­பத்தில் நீங்கள் கூறிய விட­யங்­களை உங்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்கி புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முன்­வை­யுங்கள். அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள கார­ணி­களை அடிப்­ப­டை­யாக கொண்டு நாம் எமது தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். இப்­போது எமது நிலைப்­பா­டு­களை உட­ன­டி­யாக கூற வேண்­டிய தேவை ஏற்­ப­ட­வில்லை.

அது­மட்டும் அல்ல, தற்­போது வடக்கு கிழக்கு தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஐந்து பிர­தான தமிழ் கட்­சி­களும் இணைந்து ஒரு நிலைப்­பாட்­டினை எட்­டி­யுள்­ளன. எமது மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் கோரிக்கைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆகவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நிலைப்பாடுகளை ஆராய்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுவின் நிலைப்பாட்டை ஆராய்ந்தும் நாம் அடுத்த கட்ட தீர்மானம் எடுக்க முடியும் என பிரதமரிடத்தில் எடுத்துக்கூறியுள்ளார். 

5 கருத்துரைகள்:

மற்றவனுக்கு குழி வெட்டப்போய் தான் விடுத்த கதை ஆகிவிடக்கூடாது

Ranil should remind him of what happened when LTTE prevented Tamils from voting Mahinda won and caused colossal damage to Tamils. Every vote cast against Sajith or boycott will benefit Gotabaya to win and similar fate would befall on Tamils.

Well done Samanthar sir
Best decision for Tamils is Not to vote for any idiots in this election.

We don’t care which idiot is going to rule SL.

Fool Samanthan, you prepare for your coffin

Post a comment