Header Ads



எந்த இனவாதிக்கும் எமது நாட்டு, மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது - அநுரகுமார சாட்டையடி

இனவாதிகள் எவராலும் நாட்டின் பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று -23- நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பலாலி தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம். தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் பிரதேசங்களில் பெயர் பலகைகளில் தமிழ் மொழி முதலிலும், சிங்களம் இரண்டாவதாகவும் எழுதப்படும்.

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளிலும் முதலில் தமிழ் மொழியிலேயே பெயர்கள் எழுதப்படுகின்றன. இது நியாயமானது.

அந்த மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ் என்பதால், அவர்கள் அறிந்த மொழியில் எழுத வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளில் சிங்களத்தில் எழுதி சரிப்பட்டு வருமா?.

சிங்களம் சிறிதாக உள்ளது. தமிழ் பெரிதாக உள்ளது. அங்கு அதிகளவில் தமிழ் மக்கள் இருப்பதே இதற்கு காரணம்.

இது பெரிய பிரச்சினையில்லை.யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச தேர்தல் அலுவலகத்திலும் தமிழ் மொழிக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் தேர்தல் அலுவலகத்திலும் முதலில் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளது. அதற்கு கீழே சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது முதலில் தமிழ் இருக்கின்றது. ஆனால், தென் பகுதிக்கு வந்து பலாலி விமான நிலையத்தில் சிங்கள மொழியை அழித்துள்ளதாக கூறுகின்றனர்.

சிங்களத்திற்கு முதலிடம் இல்லை என சிங்கள மக்களை தூண்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருப்பது தமிழ் வாக்குகள்.

அதனால், அங்கு சென்று தமிழ் முதலிடத்தில் வைக்கும் ராஜபக்சவினர். தெற்கில் அது குறித்து இனவாதத்தை தூண்டுகின்றனர்.

எந்த இனவாதிகளுக்கும் எமது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. Sensible speech by an honest politician. Unfortunately he can't win the election. Every vote cast for him will benefit Gota.

    ReplyDelete

Powered by Blogger.