Header Ads



மகிந்த - ரணில் உட்பட எவராலும், நான் முல்லைத்தீவில் குடியேறுவதை தடுக்க முடியாது - ஞானசாரர்

முல்லைத்தீவுக்கு சென்று குடியேறப் போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -24- இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

யார் தடுத்தாலும் அதனை செய்யப்போவதாகவும் குறிப்பிட்ட அவர், மகிந்த அல்லது ரணில் உட்பட எந்த அரசாங்கம் வந்தாலும் முல்லைத்தீவுக்குச் சென்று குடியேறுவதை எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் சூளுரைத்தார்.

எனினும் தேர்தல் காலம் என்பதால் தாம் அமைதி முறையை கடைபிடிப்பதாகவும் ஞானசார தேரர் கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“வடக்கில் தற்போது தனி அரசாங்கமே காணப்படுகிறது. பிரிவினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை .

தனி நாடு பற்றி பேசி சட்டத்தை தங்கள் இஷ்டத்துக்கு அவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது .

வடக்கில் வேறொரு அரசாங்கமே இருக்கிறது. இந்த அரசாங்கத்தின் குதர்க்கமான ஆட்சியின் காரணமாகவே சிங்கள பௌத்தர்களுக்கு இந்த நாட்டில் இடமில்லாமல் போகிறது.

எங்களுக்கு அமுல்படுத்தப்படும் சட்டம் பிரிவினைவாதிகளுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை. சட்டத்தை அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.” என கூறியுள்ளார்.

1 comment:

  1. யாரும் எங்கும் சட்டப்படி பணம் கொடுத்து காணி வாங்கி, வீடு கட்டி குடியேறமுடியும்.

    ஆனால், அடாத்தாக பிடித்த காணி, அரச காணி, காடழித்து பிடித்த கள்ள காணி, அரசியல்வாதிகள் தந்த காணி போன்றவைகளில் செய்யும் கள்ள குடியேற்றங்கள், நீங்கள் (ஞானசேர) மட்டுமல்ல, ரணில், மகிந்த வும் வடக்கில் செய்ய முடியாது

    ReplyDelete

Powered by Blogger.