Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் முயற்சியை, கண்டிக்கிறார் சுவீடன் யுவதி


2005ம் ஆண்டு ரோயல் பார்க் தொடர்மாடியில் கொலை செய்யப்பட்ட சுவீடன் யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி கரோலின் ஜோன்சன் பிரட்லி தனது சகோதரியை படுகொலை செய்த நபரிற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

முகநூலில் இதனை பதிவு செய்துள்ள அவர் இலங்கை ஜனாதிபதியின் இந்த முடிவு தனது இதயத்தை நொருக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்

ரோயல் பார்க் தொடர்மாடியில் படுகொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரி தனது முகநூலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

2005 இல் ரோயல் பார்க் தொடர்மாடியில் ஈவிரக்கமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட 19 வயது சுவீடன் யுவதியான எனது சகோதரி குறித்து செய்திகள் மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எனது தங்கையின் மரணத்திற்கு காரணமானவர் ஒருநாள் விடுதலை செய்யப்படும் நிலையை சந்திக்கவேண்டியிருக்கும் என்பதை எங்கள் குடும்பம் அறிந்திருந்ததா?

எனது தங்கையின் மரணத்திற்கு காரணமானவரின் குடும்பத்தவர்கள் பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் இது நடைபெறும் என்பது எங்களிற்கு தெரியும்.

ஆனால் ஜனாதிபதி சமீபத்தில் தெரிவித்துள்ள காரணங்களிற்காக அவர் விடுதலை செய்யப்படுவார் என நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

தனது சகோதரிக்கோ, மகளிற்கோ இது நடந்திருந்தால் ஒருவர் எப்படி இதனை உணர்வார் என்பது எனக்குதெரியவில்லை. இந்த கொலைகாரன் எனது குடும்பத்தை மாத்திரமின்றி அவரது குடும்பத்தையும் அழித்துவிட்டார்.

இது தனியொரு சம்பவம் இல்லை. அவர் வாழ்நாள் முழுவதும் வன்முறையாளனாக விளங்கினார், பாடசாலையிலிருந்து அவர் நீக்கப்பட்டார்,சமூக நிகழ்வுகளில் அவர் தனது பொறாமையை கட்டுப்படுத்த முடியாதவராக காணப்பட்டார்.

எனக்கு அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்த அனுபவம் உள்ளது , அவருடன் உறவில் இருந்த சிறிது காலம் நான் இதனை அனுபவித்திருக்கின்றேன், அவ்வேளை நான் பொறியில் சிக்கியவராக உதவியற்றவராக அச்சப்பட்டவராக உணர்ந்திருக்கின்றேன்.

கருத்துவேறுபாட்டால் பொறுமையிழந்த நபர் ஒருவரின் செயல் என எனது சகோதரியின் கொலையை கருதமுடியாது,இது ஏற்கனவே திட்டமிடப்பட்டது.

அவர் தான் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்து விட்டு எனது தொடர்மாடிக்கு வெளியே எனது சகோதரிக்காக காத்திருந்தார்.

எனது சகோதரி வந்தவேளை அவரை 23 ம் மாடியிலிருந்து துரத்திச்சென்ற அவர் எனது சகோதரியை கீழே தள்ளி கழுத்தை நெரித்து தலையை தரையில் சிதறடித்தார்.

எனது சகோதரி 19 ம் மாடியில் காணப்பட்டார்,

நீதிமன்ற விசாரணையின் போது எனது சகோதரியின் தலை எப்படி 64 துண்டுகளாக சிதறியது என செவிமடுத்தது இன்னமும் நினைவில் உள்ளது.

எனது தந்தை பிரேத அறையில் முகமற்ற தனது மகளின் உடலையே அடையாளம் காணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவரை மன்னிக்கவேண்டுமா? சிலர் தெரிவிப்பது போன்று இது தற்செயலானதோ அல்லது சிறிய சம்பவமோ இல்லை.

கொலைகாரன் எனது சகோதரியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னரும் தனது வெறித்தனத்தை நிறுத்தவில்லை.அவர் பல தடவை எனது சகோதரியின் முகத்தை தரையில் மோதியுள்ளார்.

அதன் பின்னர் தடயங்களை அழிப்பதற்காக தனது உடலில் காணப்பட்ட சகோதரியின் குருதியை நீச்சல் தடாகத்தில் கழுவியுள்ளார்.

அவர் மறைந்திருந்திருந்திருக்கின்றார், விமானபயணச்சீட்டை பெற்று வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றுள்ளார்.

இன்று நாங்கள் சகோதரியையும், மகளையும் இழந்த நிலையில் வாழ்கின்றோம்,அவர் ஒரு தாயாகயிருந்திருப்பார்.

எனினும் குற்றவாளி சிறையிலிருந்தவாறு கலாநிதி பட்டம் பெற்றுள்ளதன் மூலம் திருந்தியுள்ளார் என்பதற்காக மேற்குறிப்பிட்ட அனைத்து விடயங்களையும் புறக்கணிப்பதா?

திருந்தியுள்ள நபர் ஏன் எங்கள் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை, கடந்த 15 வருடங்களாக நாங்கள் முறையான வழியில் நீதிக்காக போராடியுள்ளோம், ஆனால் அவரது குடும்பத்தினர் இலஞ்சம் வழங்கி அவரை விடுவிப்பதற்கு முயன்றுள்ளனர்.இதற்கு முடிவு கட்டவேண்டும்.

அவர்களிடமிருந்து பணம் பெற்றவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன்,நீங்கள் இரத்தத்தில் தோய்ந்த பணத்தை பெற்றிருக்கின்றீர்கள், நீங்கள் எப்படி உங்களுடன் வாழ்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

எனது சகோதரி அன்றிரவு மதுஅருந்தியிருந்தார் என தெரிவிப்பவர்களிற்கு அவர் அன்றிரவு வாகனம் செலுத்தியதால் மது அருந்தவில்லை என்பதையும் அது அவரது பிரேத பரிசோனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனது சகோதரிக்கு கொலைகாரன் ஏற்படுத்திய வலி மற்றும் துன்பத்தை எங்களால் மறக்க முடியாது, தான் செய்த குற்றத்திற்காக கவலைப்படவில்லை என்பதை அவர் தற்போதும் காண்பித்து வருகின்றார்.

எங்கள் சகோதரியின் மரணம் எங்களது உலகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது என தெரிவிப்பது எங்களது துயரத்தை குறைத்து தெரிவிப்பதாகும்.

சகோதரியின் பிரேதப்பெட்டி மண்ணிற்குள் சென்ற அந்தவேளை நானும் மண்ணில் புதையுண்டேன்.எனது தந்தை தாயும் கூட அந்த நிலைக்கு தள்ளப்பட்டனர்.

நாங்கள் எங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப முயன்றுகொண்டிருக்கின்றோம், 15 வருடங்களாகியும் இன்னமும் நீதிக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம்,ஆனால் நாங்கள் தற்போது மிகமோசமான விடயங்களிற்காக எங்களை தயார்படுத்தவேண்டியுள்ளது,

1 comment:

  1. Dear Sister ,
    we Sri Lankan are sorry to hear what happened to your sister and your family. we have no words to console your situation.
    But our president most of the time behave like he is just out of coma, and implement decision, that no body can accept, and obviously it is wrong in every ones eyes. for example he pardon Ven.Ganasara Thero, who went to jail on contempt of court case.

    I believe after reading your grievance note, Our president may rethink and realize.

    ReplyDelete

Powered by Blogger.