Header Ads



கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல, அவர் கருணையானவரே - ரதன தேரர்

கோத்தபாய ராஜபக்ச தீயவர் அல்ல, அவர் கருணையானவரே என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,

இதற்கு முன்னர் நாம் யுத்தம் ஒன்றை சந்தித்தோம். கொடூரமான பயங்கரவாதிகளுடன் நாம் போரிட்டோம். அதற்கிடையில் இரு பக்கங்களிலும் சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

எப்போதுமே இரக்கம் காட்டி யுத்தத்தை நிறைவு செய்ய முடியாது. இவ்வாறான யுத்தம் செய்த நாடுகளின் மத்தியில் மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது.

எனினும் இறுதி யுத்தத்தில் போரிட்ட இராணுவத்தினரை துரோகிகளாக பெயரிட்டவர்களும் இருந்தனர்.

மேலும், கடந்த காலங்களில் நான் கோத்தபாய ராஜபக்ச குறித்து எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. ஒட்டுமொத்த ராஜபக்சர்களின் அரசாங்கத்தையே விமர்சித்தேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோத்தபாயவை பிரதமராக்கி ஐதேக அரசாங்கத்தை தோற்கடிப்போம் என்றேன். மத்திய வங்கி சம்பவமே இத்றகு காரணம். கோத்தாவுடன் எனக்கு எவ்வித முரண்பாடுகளும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. JM: you should remember & educate this monks atrocities against muslim of this country after the Easter bomb, specially Dr. Shafi case & 3 politicians cases for not to go behind these candidates.

    ReplyDelete
  2. சொல்ற இவரு பெரிய நல்லவரு, கருணையாளறு... உண்ட கருத்ததான் எல்லோரும் எதிர் பாத்து இருக்கிறோம்.... போயா பொத்திக்குட்டு

    ReplyDelete

Powered by Blogger.