Header Ads



ஜனா­தி­பதி தேர்­தலில் ஹிஸ்­புல்லாஹ் போட்­டி­யி­டு­வாரா..? இல்­லையா..??

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறி­விக்­க­வுள்­ள­தாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது குறித்து ஏற்­க­னவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்­புல்லாஹ் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்த நிலையில் அவ­ரிடம் இது தொடர்­பாக நேற்று கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தமது முடி­வினை அறி­விக்­க­வுள்­ளது. இந்த நிலையில் நான் தற்­போது வெளி­நாட்டில் நிற்­கின்றேன். நான் நாட்­டுக்கு வந்­த­வுடன் அவ­ச­ர­மாக முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் தலை­வர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள், பிர­மு­கர்கள், உல­மாக்கள் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்னர் எனது முடிவை எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்­கி­ழமை அறி­விப்பேன்.

யாரை ஆத­ரிப்­பது அல்­லது போட்­டி­யி­டு­வதா என்­பன குறித்து எனது கருத்தை அன்­றைய தினம் வெளி­யி­டுவேன்.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­டு­வ­தென தீர்­மா­னித்தால் 6ஆம் திகதி கட்­டுப்­ப­ணத்­தினை செலுத்தி 7ஆம் திகதி நிய­ம­னப்­பத்­தி­ரத்தை தாக்கல் செய்வோம்.

இதுவரை எந்த முடிவுகளையும் நான் எடுக்க வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.