October 24, 2019

இனவாதம் கதைப்பதன் மூலம் கோட்டபாய அணி, சிங்கள வாக்குகளை கபளீகரம் செய்யலாம் என நிணைக்கிள்றனர்

-          புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா -

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்ததன் மூலம்,மீண்டும் அழிவுகளையும்,வன்முறைகளையும்,குடும்ப ஆட்சியினையும் ஏற்படுத்தக்க கூடிய அரசியல் சூழலை மாற்றியமைக்க முடிந்தது என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

புத்தளத்தில் புதன்கிழமை மாலை இடம் பெற்ற சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தேடும் கூட்டத்திலே் மேலும்  உரையாற்றும் போது -

கடந்த நான்கரை வருட காலத்திற்குள்,ஜனநாயகத்தை வலுப்படுத்தி,பொருளதார அபிவிருத்தியினை ஏற்படுத்தி,இனங்களுக்கு இடையில் ஒற்றுமையினை கட்டியெழுப்பக் கூடியதாக எமது இந்த ஆட்சி இருந்தது.இந்த பாதையினை மாற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ,கோட்டாபய ராஜபக்ஷவின் மூலம்  மீண்டும் ஒரு இருண்ட யுகத்திற்கும் இட்டுச் செல்ல முற்படுகின்றார்.எம்மால் கட்டியெழுப்பப்பட்ட புரிந்துணர்வுடன் சர்வதேச சமூகத்துடன் பயணிக்க வேண்டும்,எதிர்கால சமூகத்திற்கு சிறந்ததொரு வழிகாட்டல்களை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.அச்சமற்றதும்,சுதந்திரமானதுமான மக்களாக ஒற்றுமையுடன் நாம் பணியாற்றுவதுடன்,இலங்கையர்கள் என்ற நாமத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டியுள்ளது.இதனை சஜித் பிரேமதாசவின் ஆட்சியிலும் மக்கள் அனுபவிக்க முடியும் என்பதை இந்த மேடையில் இருந்து தெரிவிக்கவிரும்புகின்றேன்.

நாங்கள் தேசிய ஒற்றுமையினை பற்றி பேசிக் கொண்டிருக்கின்ற போது கோட்டாபய ராஜபக்ஷவின் மேடையில் பேசுகின்றவர்களின் பேச்சினை பாருங்கள்.இனவாதத்தையும்,மத வாதத்தையும் ஏற்படுத்தி சமூகத்தினை பிரித்து ஒருவருக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் கருத்தாகவே இருக்கின்றது.தேசிய கீதத்தில் குறிப்பிடுவது போன்று ஒரு தாயின் பிள்ளைகள் நாங்கள் அனைவரும் என்ற யதார்த்தத்தை கட்டியயெழுப்பும் வேலைத்திட்டத்தை உயிர்ப்பிக்க நாம் சஜித்துடன் பயணிக்கின்றோம்.மொட்டுக் கட்சியில் இருக்கும் கோட்டபய ராஜபக்ஷவின் அடிவருடிகளுக்கு நாம் சிங்களத்தில் சொல்கின்றவைகள் விளங்குவதில்லை.நவம்பர் 16 ஆம் திகதி சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும்,கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு அமெரிக்க செல்ல முன்னர் மொட்டுக் கட்சிக்காரர்களுக்கு சிங்கள  மொழிப் பாடத்தை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கேட்டுக்கொள்கின்றேன்.

மஹிந்த ராஜபக்ஷ அணியினர் எதிர்கட்சியில் இருந்து கொண்டு அதிகாரமில்லா நிலையில் எமது சமூகத்திற்கு எதிராக மேற்கொண்ட அடாவடித்தனங்கள் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள்,பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன,கடைகள் எரிக்கப்பட்டன,உயிர்களும் பறிக்கப்பட்டன,மதக் கடமைகளை நிறுத்தும் அளவுக்கு படுமோசமான முகத்துடன் செயற்பட்டார்கள்.அதிகாரமில்லாத போது இப்படி என்றால்,அதிகாரத்தை அவர்களது கையில் ஒப்படைப்போம் என்றால் நிலமை எப்படி இருக்கும் எனபதை நினைத்து கூட பார்க்க முடியாது.

நான் ஒரு இஸ்லாமியன் என்றாலும் சிங்கள மொழியில் சொல்லும் விடய்களை நன்றாக புரிந்து கொள்ளமுடிகின்றது.இனவாதத்தை கதைப்பதன் மூலமே கோட்டபாய அணியினர் சிங்கள மக்களின் வாக்குகளை கபளீகரம் செய்யலாம் என நிணைக்கிள்றனர். என்றும் பாரர்ளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment