Header Ads



சந்திரிக்காவிற்கு,, தயாசிறி அனுப்பியுள்ள பதில்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைத்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனுப்பிய கடிதத்திற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இன்று -12-பதில் வழங்கியுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் தனது பதிலை பதிவேற்றியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெறுமதி மற்றும் கௌரவத்தை பாதுகாப்பதற்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்ததாக தயாசிறி ஜயசேகர தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

S.W.R.D. பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியை ஆபத்திற்குள்ளாக்குவதற்காக எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தமது கட்சியின் கொள்கைகளுடன் முரண்படுவதால், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்ததாக பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எடுத்த தீர்மானமே, கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்னடைவை சந்தித்தமைக்கு பிரதான காரணம் என தயாசிறி ஜயசேகர தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணக்கப்பாடு காரணமாக நாட்டில் முன்னிலையில் இருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த 5 வருடங்களில் மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்திற்கு அமைய செயற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு கட்சி மற்றும் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளுக்கு அப்பால் செயற்பட வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.