Header Ads



நோன்பு திறக்கும் நேரத்தில், கஞ்சி குடிப்பதில் சந்தோசம் இருக்கின்றது - அநுரகுமார (வீடியோ)


எமது நாடு, சிங்களம் தமிழ் என்ற பிரதான இரண்டு மொழிகள் பேசுகின்ற ஹிந்து, இஸ்லாம், கத்தோலிக்கம், பௌத்தம் என்ற பிரதான நான்கு சமயங்களைப் பின்பற்றுகின்ற, மூன்று கலாசாரங்களைக்கொண்ட நாடு.

தமிழ் ஹிந்து கலாசாரம், முஸ்லிம் இஸ்லாமிய கலாசாரம், சிங்கள பௌத்த கலாசாரம் என நம் ஒவ்வொருவருக்கும் கலாசாரத் தனித்துவங்கள் இருக்கின்றன.

ஒருவர் அடுத்தவருடைய கலாசாரத்தை அழித்தொழித்துவிட்டு, நாம் எல்லோரும் ஒரே விதமான கலாசாரமாக மாறிவிடுவது அழகாக இருக்குமா? இல்லை! ‘அழகு பன்மைத்துவத்தில் உள்ளது’.

பொங்கள் தினத்தில் தமிழ் வீடொன்றில் பொங்கள் சாப்பிடுவதில் இன்பம் இருக்கின்றது. நோம்பு திறக்கும் நேரம் கஞ்சி சாப்பிடுவதில் சந்தோஷமொன்று சுரக்கின்றது. பன்சாலையில் அண்ணதான நிகழ்வில் கலந்துகொள்வதில் பிணைப்பொன்று உருவாகின்றது. கலாசாரத் தனித்துவங்கள்தான் எமது நாட்டை அழகுபடுத்தி ஒளியைப் பாய்ச்சிருக்கின்றது.

ஆனால் இன்று என்ன நடைபெற்றுள்ளது? நாம் அந்த கலாசார தனித்துவங்களுக்காக சண்டை பிடிக்கின்றோம். அடுத்த மனிதனை சந்தேகத்தோடும் பகையோடும் பார்க்கின்றோம். தொப்பி அணிந்திருந்தால் சந்தேகம், பொட்டு வைத்திருந்தால் சந்தேகம், சாரி அணிந்திருந்தால் சந்தேகம்... நமது நாட்டில் என்ன நடைபெறுகின்றது?

நாங்கள் (தேசிய மக்கள் சக்தி)யின் முன்னெடுப்பு கலாசார தனித்துவத்திற்காக ஒருவரையொருவர் பிரிப்பதற்கு அல்ல. இவர் தொப்பி அணிந்திருக்கின்றார், இவள் சாரி உடுத்தியிருக்கின்றாள், இவள் பொட்டு வைத்துள்ளாள் என்று சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதற்கு அல்ல. ஒவ்வொருவரும் கலாசார தனித்துவத்திற்காக மோதுவதற்கோ அச்சத்துடனும் குரோதத்துடனும் பார்ப்பதற்கோ அல்ல.

ஒவ்வொருவரும் அடுத்தவரின் கலாசாரத் தனித்துவத்தை ஏற்றுக்கொள்கின்ற மதிக்கின்ற கலாசாரத்தைக் கட்டியெழுப்பும் சமூகத்தை தான் தேசிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. அடுத்த மனிதனின் கலாசாரத்தை ஏற்றுக்கொண்டு மதிக்கின்ற சமூகமொன்றை கட்டியெழுப்பும் அரசியலில் தேசிய மக்கள் சக்தி ஈடுபட்டிருக்கின்றது.

நான் அக்குரனை மக்களிடம் (உங்களிடம்) கேட்கின்றேன். எந்த வகை அரசியல் உங்களுக்கு வேண்டும்? கலாசாரத் தனித்துவங்களைக் காட்டி குரோதத்தை மூட்டிவிடும் அரசியல்தான் உங்களுக்குத் தேவையென்றால் இரண்டு அரசியல் முகாம்கள் இருக்கின்றன, அவற்றைக் கட்டிப்பிடித்துக்கொள்ளுங்கள், 71 வருடங்களாக கட்டியழிந்ததைப் போன்று.

ஆனால் உங்களுக்குத் தேவை கலாசாரத் தனித்துவங்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருகின்ற சமத்துவமான உரிமைகளை அங்கீகரிக்கின்ற அரசியல் என்றால், நீங்கள் வாக்களிக்க வேண்டியது தேசிய மக்கள் சக்தி(யின் திசைகாட்டி சின்னத்து)க்கு தான்.
-----------------------------------------------------

அக்குரணை நகரில் ஆற்றிய உரையிலிருந்து -


1 comment:

  1. day utter fool JVP under kotha ajenda even not use for muslim, it is plan to separate muslim vote

    ReplyDelete

Powered by Blogger.