Header Ads



சஜித்தை வைத்து, கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவோம் - அகில

நாட்டின் கல்வி துறை உட்பட ஏனைய துறைகளினதும் எதிர்காலத்தை நோக்கி சரியான தீர்மானத்தை எடுத்து சிறார்களை எதிர்கால நலன்களை நோக்கும் வகையிலான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியே அமைக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் நேற்று (30) குருநாகலில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுத்தனர். எனினும் தற்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு எமது கட்சி மீது எத்தகைய சேரு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் நாம் ஊடகங்கள் மீது எவ்வித அச்சுறுத்தல்களை முன்னெடுக்கவில்லை.

அத்துடன் தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் அரச நிறுவனங்களுக்கு சென்று தகவல்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தகவல் அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவி நீதுத்துறை மற்றும் பொலிஸ கட்டமைப்பை சுதந்திரமாக இயங்க செய்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக்கி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று இம்முறை சஜித் பிரேமதாசவை களமிறக்கி கோத்தாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப நாம் தயார்.அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு விவேகத்துடனும் வேகத்துடனும் பணியாற்றக் கூடியவர்கள் அவசியமாகும். அவ்வாறான திறமை கொண்டோர் ராஜபக்ஷ ரெஜிமன்டில் அன்றி ஐக்கிய தேசியக் கட்சியிலேயே உள்ளனர் என்றார்.

1 comment:

  1. Minority communities do not have any option except to vote for UNP. Why? JVP will not get enough votes. So, voting JVP will give a good chance to Gota. so, all minorities groups: Tamils, Malay, Muslims must vote for Sajith in order to make him the winner. It is in the interest of democracy , human rights, and freedom. Otherwise, dictators will ruin this nation. For sure it will happen, last 10 years have told us this.

    ReplyDelete

Powered by Blogger.