Header Ads



பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து, முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் - மெல்கம் ரஞ்சித்


மதகுருமார் அரசியல் மேடைகளில் ஏறாது முழுவதுமாக விலகினால் நாடு ஆசீர்வதிக்கப்படுமென பேராயர் மெல்கம்  ரஞ்சித் தெரிவித்துள்ளார்.   கொள்ளையர்கள் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்பு ரீதியாக தடைசெய்ய வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.    

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   

கடந்த 30வருடங்களுக்கு முன்னர் தேவாலயம் ஒன்றில் நான் இருந்த தருணத்தில், பிரதி அமைச்சர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என கூறினார். நான் கேட்டேன் ஏன் என்று. அதற்கு பிரிதி அமைச்சர் கூறினார். அரசியலில் தேவையான அளவு பணத்தை சம்பாதித்து விட்டேன் என்று. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அந்த பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. 

கடந்த 30 வருடங்களுக்கு முன்னரும் இலங்கையில் இதுபோன்ற நிலைமைதான் காணப்பட்டது. தற்போது எனக்கு 70 வயதாகின்றது. எனது இளைஞர் பருவத்தில் இருந்து இவர் போன்றவர்களை பார்த்துக் கொண்டுதான் உள்ளேன். கொள்ளையர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை அரசியலமைப்பிலேயே மாற்ற வேண்டும். சரியாக நடக்க கூட முடியாதவர்கள் இளைஞர்களை மேலே வரவிடாமல், அவர்களது தாய் தந்தைக்கு சொந்தமானது போல பயன்படுத்துகிறார்கள். தனது எண்ணம் என்னவென்றால் பௌத்த தேரர்கள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் காலம்தான் இந்நாடு ஆசீர்வதிக்கப்படும் என்று பேராயர் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

6 comments:

  1. please be watch full cardinal.every body from yellow robs group will be silent till the elections are over.after november 17th whether it is gothapyia or sjithaya or anuraya who ever wins no boby will be there to safeguard you from YELLOW ROBS MODAYAS.

    ReplyDelete
  2. You said is 100 percent correct.

    ReplyDelete
  3. Now only he realized the situation and telling the truth. However, Tamil Catholics are not prepared to accept him.

    ReplyDelete

Powered by Blogger.