October 28, 2019

இலங்­கையின் சிறந்த அறிஞர் கோத்தபாய, சஜித்துடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை தெரியுமா...?

சஜித் பிரே­ம­தா­ச­ போன்ற சாதா­ரண மனி­த­னுடன் விவா­தத்­துக்கு சென்று கோத்­த­பாய ராஜ­பக்ஷவின் நற்­பெ­யரை  பாதிப்­ப­டை­யச்­செய்ய நாங்கள் இட­ம­ளிக்­க­மாட்டோம் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

கோத்­த­பாய ராஜபக் ஷ முடி­யு­மானால் பகி­ரங்க விவா­தத்­துக்கு வர­வேண்டும் என சஜித் பிரே­ம­தாச விடுத்­தி­ருக்கும் சவா­லுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

முழு உல­கமும் தோற்­க­டிக்க முடி­யாது என தெரி­வித்த கொடூர யுத்­தத்தை மிகவும் சூட்­சு­ம­மான திட்­ட­மிடல் மூலம் தோற்­க­டித்­த­வர்தான் கோத்­தா­பய ராஜபக்ஷ். அதற்­காக அவர் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதி பட்டம் பெற்­றவர். அதே­போன்று கணனி விஞ்­ஞா­னத்தில் பட்­டப்பின் பட்டம் பெற்­றவர். அத்­துடன் சிங்­கப்பூர் மற்றும் சீன பல்­க­லைக்­க­ழ­கங்­களின் அழைப்­பின்­பேரில், நகர அபி­வி­ருத்தி மற்றும் பாது­காப்பு திட்டம் தொடர்­பாக ஆய்­வு­மேற்­கொண்­டவர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பேரா­சி­ரி­யர்கள் வைத்­தி­யர்கள் சட்­டத்­த­ர­ணிகள் போன்ற கல்­வி­மான்கள் இணைந்து உரு­வாக்­கிய  அறி­ஞர்­களின் அமைப்­புதான் வியத்­மக என்­ப­தாகும். அந்த அறி­ஞர்கள் தங்­களின் தலை­வ­ராக கோத்­தா­பய ராஜ­பக்ஷ்­வையே  தெரி­வு­செய்­து­காெண்­டார்கள். அதன் பிர­காரம் கோத்­தா­பய ராஜபக்ஷ் என்­பவர் இலங்­கையில் இருக்கும் அறி­ஞர்­க­ளுக்கு மத்­தியில் இருக்கும் சிறந்த அறிஞர்.

ஆனால் இவ்­வா­றான கல்­வி­ய­லா­ளரை விவா­தத்­துக்கு அழைக்கும் சஜித் பிரே­ம­தாச என்­பவர் யார். ஜனா­தி­பதி தேர்தல் வர­லாற்றில் மிவும் நகைச்­சு­வை­யான வேட்­பாளர். சிறு­பிள்­ளைத்­த­ன­மாக பேசும் இவ­ருக்கு தனது கொள்கை பிர­க­ட­னத்­தைக்­கூட இது­வரை வெளி­யி­ட­மு­டி­யாமல் இருக்­கின்­றது. செயற்­ப­டுத்த முடி­யாத வாக்­கு­று­தி­களை மாத்­தி­ரமே அவரால் தெரி­விக்­க­முயும்.

எனவே இவ்­வாறு நகைச்­சுவை பேசிக்­கொண்­டி­ருக்கும் ஒரு­வ­ருடன் கோத்­தா­பய ராஜபக்ஷ் போன்ற சிறந்த கல்­வி­மானை  விவா­திப்­ப­தற்கு எவ்­வாறு அனுப்­பு­வது? அதனால் கல்விமான்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுவரும் கோத்தாபய ராஜபக்ஷ்வை கல்வியறிவு இல்லாத சஜித் பிரேமதாசவுடன் விவாத்துக்கு அனுப்பி அவரின் நற்பெயரை அசிங்கப்படுத்திக்கொள்ள நாங்கள் இடமளிக்கப்போவதில்லை என்றார்.

2 கருத்துரைகள்:

நாங்க விழுந்தாலும் எங்களுக்கு மீசையில மண் படாது..
ஏன்னா எங்களுக்கு மீசையே இல்ல 😂

DEAR MR.GONPULLE IF SAJITH WINS YOU HAVE TO GO BACK TO AUSTRALIA AND GET BACK YOUR JOB AS ABITHIYA IN THE PANSALA.I WONDER THE CASE PENDING AGAINST YOU AT HIGH COURT WILL PERMIT YOU TO LEAVE THE COUNTRY.

Post a comment