Header Ads



சமூகப்பொறுப்பு குளிர்நீரில் உறைந்து போயுள்ளது, ஒன்றாக அமர்ந்து திரைப்படம் பார்க்க வேண்டும் - அனுரகுமார

மனித வளர்ச்சிக்கு உகந்த சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப கலைஞர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

பத்தரமுல்லையில் கலைஞர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். 

தேசிய மக்கள் சக்தியின் கலாச்சார மற்றும் கலை சாசனம் தொடர்பில் கலைஞர்களை தெளிவுப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (20) இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சட்டத்தை அமுல்படுத்த போராடிய சில டீ.ஐ.ஜி அதிகாரிகள் இன்று சிறிய தேனி ஒன்றை கொலை செய்ததற்காக சிறையில் உள்ளதாக கூறினார். 

சட்டம் மற்றும் சட்டவாட்சியை நிலைநிறுத்த வேண்டிய சில பொலிஸ் அதிகாரிகள் இன்று கொலைகாரர்களைப் பாதுகாக்க சிறைக்குச் சென்றுள்ளதாகவம், ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள சமூகப்பொறுப்பு இன்று குளீர் நீரல் உறைந்து போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு அறிக்கையில் 16 வயதுக்கு மேற்பட்ட 1,600 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30,000 வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் அதற்கமைய ஒவ்வொரு நாளும் குறைந்தது எட்டு பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் கடந்த 2017 ஆம் ஆண்டில் 25,000 க்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட 4,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறிய அவர் எம்முன் பாமர மக்கள் என்ற ஒரு பிரிவு உள்ளதாகவும் தெரிவித்தார். 

எனவே இந்த சமூகத்தை சிறந்த வழியில் ஆற்றுப்படுத்த வேண்டும் எனவும் அனுராதபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று மேலதிக வகுப்புகள் இடம்பெறுவதாகவும் அதேபோல் தம்புத்தேகம பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றும் நெல் களஞ்சியசாலையாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார். 

தற்போது எமது சினிமா துறைக்கு என்ன நடந்துள்ளது எனன கேள்வி எழுப்பிய அவர், கிராமங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து திரைப்படம் ஒன்றை பார்க்கக்கூடிய கலாச்சாரம் இன்று இல்லாது போயுள்ளதாகவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.