Header Ads



துருக்கியில் இடம்பெறும் சர்வதேச மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து பேராசிரியர் ஜலால்தீன்

ஆசிய – பசுபிக் நாடுகளுக்கான சர்வதேச ஆய்வு மாநாடு, ஒக்டோபர் 23,24ந் திகதிகளில் துருக்கி இஸ்தான்பூல் நகரில் உள்ள 'கெலிசிம'பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. ஆசிய – பசுபிக் நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் பலர் இம்மாநாட்டில் கலந்து கொள்வதுடன், ஆசிய – பசுபிக் நாடுகளில் காணப்படும் பல்வேறு ஆய்வுப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இலங்கையிலிருந்து இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு, மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர், மௌலவி. எம்.எஸ்.எம். ஜலால்தனீ ; ஏற்பாட்டுக் குழுவினரால் அழைக்கப்பட்டுள்ளதுடன், இவரது பிரயாணத்துக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இம் மாநாட்டில் பேராசிரியர் ஜலால்தனீ ; விஷேட ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார.;

ஏதிர்வரும் 20ந் திதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையிலிருந்து புறப்படும், பேராசிரியர் அவர்களுக்கு இம்மாதம் 28ந் திகதி வரை கலந்துகொள்ளும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்துள்ளது.

No comments

Powered by Blogger.