Header Ads



அத்தியவசிய பொருட்களின், விலை குறைகிறது (விபரம் உள்ளே)

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் தற்போது 450 - 500 ரூபாவிற்குள்ள காய்ந்த மிளகாயின் விலையை குறைப்பதை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் காய்ந்த மிளகாய் ஒரு கிலோவிற்கான வரி 25 ரூபாவில் இருந்து 5 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் மீன் ஒரு கிலோவிற்கான வரி 100 ரூபாவில் இருந்து 25 ரூபாவாக குறைப்பதற்கு வாழ்க்கை செலவுக்கான குழு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் கோழி மற்றும் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்காக அவற்றை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அரசாங்க களஞ்சியசாலையில் உள்ள 48,000 மெட்ரிக் தொன் நெல்லை சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் உதவியுடன் அரிசியாக மாற்றி சதொச ஊடாக, நாடு ஒரு கிலோ 80 ரூபாவிற்கும் சம்பா ஒரு கிலோ 85 ரூபாவிற்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. please reduce the beef price also to 500/- per kg

    ReplyDelete
  2. கோழி,முட்டை வருகிறது கேரளாவிலிருந்து,பொதுமக்களின் இரத்தம்தோய்ந்த பணம்கோடானகோடி கமிசனாக செல்லத்தயாராகிறது. பொதுமக்களுக்கு தெவிபிஹிடய்.

    ReplyDelete
  3. OWWARU THERTHALILUM EMAARA
    INDA NAATTU MAKKAL,MUTTAALKAL ILLAI.
    MUTHALIL 2015 KODUTHA
    WAAKKUKALAI NIRAIVETRAVUM.
    ENDA NAALUM KOLIPPALUKKU
    EMAARA MUDIYATHU.

    ReplyDelete
  4. எத்துன எலக்சன பாத்திருப்பம் 😅😅

    ReplyDelete

Powered by Blogger.