Header Ads



திரைமறைவு அரசியல் காய்நகர்த்தலில் சந்திரிக்கா - சஜித் ஆதரவு பிரச்சாரத்திலும் குதிக்கிறார்

பிரித்தானியாவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் திரைமறைவு அரசியல் காய்நகர்த்தல் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய பிரபலங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணையவுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று சந்திரிக்கா இன்று நாடு திருப்பவுள்ளார். அதன் பின்னர் இந்த கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ கலந்து கொள்ளும் மக்கள் பேரணியில் இவர்கள் அனைவரும் இணையவுள்ளதாக கட்சி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் எதிர்வரும் நாட்களில் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷக்கு ஆதரவு வழங்கியுள்ள சுதந்திர கட்சியை காப்பாற்றும் நோக்கில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Welcome Back Madam..
    All the best but what if you all join the hands of JVP... They are having good plan for future better than UNP thieves.

    ReplyDelete
  2. Welcome Back Madam..
    All the best but what if they all join the hands of JVP...
    JVP are having a good plan for better future than UNP thieves..
    Say Yes to JVP

    ReplyDelete
  3. @TrueF, all are thieves, we know personally. However we have to choose one among the bad.

    ReplyDelete

Powered by Blogger.