Header Ads



சஜித் பிரேமதாசவுக்கு வழங்கும் வாக்கு, றிசாட் பதியுதீனுக்கு வழங்கும் வாக்கு என நினைத்து கொள்ளுங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எதனைப் பெற்றுத் தந்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டு விரட்டியடியுங்கள் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று -18- இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் எமது மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் கடந்த 4 வருட காலமாக இல்லாமல் போயிருக்கிறது. தமிழ் மக்களுக்கு தேவையான அரசியலமைப்பை பெற்றுக் கொடுக்கின்றோம். சமஸ்டியை பெற்றுக் கொடுக்கின்றோம். அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொடுக்கின்றோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். நல்லாட்சியை ஏற்படுத்துகின்றோம் என்று ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

ஆனால் அந்த ஆட்சியில் எமது மக்களுக்கான உரிமைகளும் கிடைக்கவில்லை. அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. வன்னி மாவட்டத்தில் இருக்கும் தமிழ் மக்கள் பாரிய அளவில் மிகவும் கஸ்ரத்துடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்களுக்கு உரிமைகள் எவ்வளவு அவசியமோ அதைவிட வேகமாக அபிவிருத்திகள் தேவைப்படுகிறது. அந்த அபிவிருத்திகளை வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் பெறக் கூடியதாக இருக்கும். இல்லையென்றால் கடந்த நான்கு வருடங்களைப் போல் மீண்டும் 5 வருடங்களை கடக்க வேண்டி வரும். இந்த அடிப்படையை தமிழ் மக்கள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

வன்னி மாவட்டத்தில் 84 வீதமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 10 வீதமான முஸ்லீம்களும், 6 வீதமான சிங்களவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள மக்களைப் பொறுத்தவரை வவுனியாவில் நூற்றுக்கு நூறு வீதம் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்களும் அப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்தால் தான் எங்களுக்கு தேவையான பாரிய அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்தவாரம் தென்னிலங்கையின் எட்டியாந்தோட்ட, தெரனியகல, கம்பகா போன்ற பல பிரதேசங்களில் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போது அங்கு இருக்கும் 75 வீதமான சிங்கள மக்கள் கோத்தபாயவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்த வெற்றியில் தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தால் தான் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். அவர்கள் வரும் பொழுது அவர்களை விரட்டியடியுங்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எதனைப் பெற்றுத் தந்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டு விரட்டியடியுங்கள்.

மேலும், சஜித் பிரேமதாசவுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்கும் றிசாட் பதியுதீனுக்கு வழங்கும் வாக்கு என நினைத்து கொள்ளுங்கள். மீண்டும் பங்கரவாதம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் 20 அம்சக் கோரிக்கைளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிடமும், வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம் முன்வைத்து ஏற்றுக் கொண்ட பின் தான் நான் அவர்களுக்காக வேலை செய்கின்றேன்.

எனவே அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ் மக்களும் கோத்தபாயவுக்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலமே எமக்குதேவையானவற்றைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.

8 comments:

  1. Under the same token, every vote you cast for Gota is equivalent to a vote for Viyalendran and Karuna.

    ReplyDelete
  2. இவர் சொல்லும் சில கருத்துக்கள் உண்மை தான்
    தமிழர்கள் இருவருக்கும் ஆதரவு வழங்காமல் இந்த தேர்தலை புறக்கணிப்பது தான் சரி

    ReplyDelete
  3. Fool, u deceived your own brother and we know your pedigree well.u are bootlicking for a national MP post.u never can win an election.

    ReplyDelete
  4. இந்த செய்தி உன்னுடைய அறியாமையை நன்றாக விளக்குகிறது. உன் தமிழினம் தான் தமிழர்களை கொன்றவன் கோத்தாபய என்று கூறியது. இப்பொழுது பதவிகளுக்காக அதை மறைத்து விட்டீர்கள் போலும். தமிழர்களிளும் நிறைய மடையர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்கிறோம்.

    ReplyDelete
  5. மிஸடர் Ajan இரண்டு பேரில் ஒருவர் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது அவர்கள் இருவரின் இயற்கை மரணத்தை தவிர
    இந்து தமிழர்கள் இந்த இருவரின் ஆட்சியை விட்டு எவ்வாறு ஒதுங்கிருப்பார்கள் அவ்வாறு அவர்கள் ஒதுங்குவதால் என்ன இலாபம், நஸ்டமென்று கூருங்கள்?

    ReplyDelete
  6. இனவாத்த்தில் குளிர்காயும் உங்களை போன்ற சிலரால் ரிசாத், ஹிஸ்புல்லா,ஆசாத் சாலி இவர்களை பயங்கரவாதிகளாக சுட்டிக்கட்டி பதவி விலகசொன்னீர்கள்
    ஏன் கோக்கப்பயவிட்கு மக்கள் வழங்கும் வாக்கால் இதற்கு முன்பு உங்கள் பார்வையில் பயங்கரவாதியான ஹிஸ்புல்லா பிரையோஜனம் அடைவார் என்று ஏன் கூறவில்லை இந்த உங்களுடைய கருத்து நியாயமற்றது!

    ReplyDelete
  7. THIS INDIAN SAKILI HAS NO PLACE IN COLOMBO POLITICS.HE IS DOING POLITICS IN VAVUNIYA WITH THE IDIA OF CONTESTING IN PARLIAMENT ELECTIONS IN VANNI.HE WAS SUCKING AND LIKING THE BOOTS OF MY3 EARLIER NOW HE IS DOING THE SAME TO GOTHAPAYA.HE WILL BE MISSING FROM POLITICS AFTER THE NEXT PARLIAMENT ELECTIONS AND WILL HAVE TO GO BACK TO GAMPOLA HIS HOME TO PLUCK TEA LEAF AGAIN.THIS O/L QUALIFIED MAD MAN MUST NOT ADVISE SRI-LANKAN TAMILS ABOUT POLITICS AND SHUT HIS MOUTH AND LEAVE VANNI.

    ReplyDelete
  8. Put aside Praba Ganesan's talk.No one take care about his talks. the Bastard NGK asking people to leave to India first should make an example by leaving the country to his original place.

    ReplyDelete

Powered by Blogger.