Header Ads



ஆலிம்களுக்கான வதிவிட, பயிற்சிப் பட்டறை

- நாகூர் ளரீஃப் -

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, முஸ்லிம் சமூகத்தின் மீதிருந்த பல்வேறு ஐயங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்கை;கப்பட்ட வண்ணமே உள்ளன. அவற்றிலும் சில, சமூகத்தின் உள்வீட்டுக்குள் இருந்து வருபவை என்பதே வியப்பானதாகும்.

எமது முன்னோர்களான மரியாதைக்குரிய இமாம்கள், தமது கல்விப்பணி, தஃவாப்பணி ஆகியவற்றுடன் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை களைவதையே முதற்படி தஃவாவாகக் கொண்டிருந்தனர். 

எனவே, மேற்சொல்லப்பட்ட ஐயங்கள், குற்றச்சட்டுக்களுக்கு முகத்திற்கு முகம் நின்று தெளிவு படுத்த வேண்டியது ஆலிம்கள் மற்றும் தாஈக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள  முதற்தரக் கடமையாகக் கொள்ளல் வேண்டும் என்ற புரிதலினாலேயே இவ்வதிவிடப் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டு வருகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் புதிதாகப் பட்டம் பெற்று வெளியாகும் இளம் ஆலிம்களுக்கான 'ஹதீஸ் துறை உயர் கற்கை, ஃபிக்ஹுத் துறை உயர் கற்கை' என்பதை இலக்காக் கொண்டு இயங்கிவரும் ஜாமிஆ இப்னு உமர் உயர் கற்கை;கான நிறுவனம், இவ்வருடம் சுமார் 150 இளம் ஆலிம்களின் மேற்சொன்ன உயர் கற்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி இந்த முதற்தரக் கடமையைச் சுமந்து சமூகத்தில் இஸ்லாம் பற்றி ஏற்பட்டுள்ள ஐயத்தையும் அர்த்தமற்ற பீதியையும் களைவதற்காகவே இப்பயிற்சிப் பட்டறையை நடாத்தி வருகின்றது என்பது பாராட்டப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.

காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு, பாரிய நிதிச் செலவுகளுடன் எட்டு நாட்களுக்கான ஒவ்வொரு பட்டறையிலும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 30 ஆலிம்கள் கலந்து பயனடைகின்றனர். அவர்களுக்குத் தேவையான மூன்று நேர உணவு, தங்குமிட வசதிகள் அனைத்தும் கட்டணங்கள் இன்றியே செய்து கொடுக்கப்படுகின்றன. 

'எட்டு நாட்கள் மட்டும்தானா?' என்று வியக்குமளவிற்கான நாட்டின் தலைசிறந்த உஸ்தாத்மார்கள், சட்டத்தரணிகள், உளவியளாளர்கள், துறைசார்தோர் எனப்பலரும் வளவாளர்களாகக் கலந்து பட்டறையைச் சிறப்பிக்கின்றமை ஈண்டு குறிப்பிடப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.

இஸ்லாத்தைப் பற்றிய குற்றச்சாட்டுக்களாக அன்று தொட்டு முன்வைக்கப்படும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அடிமைத்துவம், அத் தகிய்யா, முர்தத்கள் சம்பந்தமான சட்டங்கள், ஹலாம் ஹராம் பற்றிய தெளிவுகள், பலதாரமணம், இளவயதுத் திருமணம், அல் மஸாலிஹுல் முர்ஸலா, விவாகரத்து ஷரீஆ சட்டங்கள், பிறமதங்களுடன் இஸ்லாம், நாட்டுப் பற்று, நபிகளாரின் பலதாரமணம் ஆகிய தலைப்புக்களுடன், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இலங்கைச் சட்டங்களுக்கான அறிமுகம், முஸ்லிம் தனியார் சட்டம், சகவாழ்வு, புத்தமதம், உளவியல், வினைத்திறன் மிக்க குத்பாக்களை நிகத்துவது எவ்வா? போன்ற இன்னும் பல தலைப்புக்கள் அலசி அராயப்படுனின்றன.

இவ்வதிவிடப் பயிற்சியில் பங்குபற்றுவேர்களுக்கு தரமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சுமார் அறுபது மணித்தியாளங்களைக் கொண்ட பாடத்திட்டம் எட்டு நாட்கள் தொடராக நடைபெறும். கலந்து பயனடைய விரும்பும் ஆலிம்களில் சிங்கள மொழியில் புலமையுள்ளோர்களுக்கும் சமூகப்பணியில் கால்பதித்து நிற்போருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
மேலதிகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள 0382246161 எனும் தெலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

இதுவரை ஐந்து ஆலிம்களின் குழுமங்கள் மேற்படி கற்கையில் கலந்து மேலதிகப் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. நல்ல பல தலைப்புகளில் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுப்பது மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால் பெரும்பான்மையினர் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டு இஸ்லாம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தூண்டுகின்றது என்ற தலைப்பு கண்டிப்பாக உள்வாங்கப்பட்டு துறைபோன அறிஞர்கள் மூலம் அவை விரிவாக விளக்கி கருத்துரைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அத்தகைய தலைப்புகள் உள்வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. இந்த பயிற்சிக்கான வளவாளர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள்,அறிஞர்கள் உள்வாங்கப்பட வேண்டும் நான் ஏன் இதனைக்கூறுகின்றேன் என்றால் இந்த நாட்டில் 250 அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவதற்குக்காரணமான கொலையாளிகள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வௌிப்படை. எனவே அத்தகைய கொலையாளிகள் இனியும் இந்த சமூகத்தில் குறிப்பாக இந்த நாட்டில் தோன்றக்கூடாது என்பதில் இந்த நாட்டில்வாழும் முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் மிகவும் கரிசனையுடன் இருக்கின்றனர். எனவே அவர்களுடைய ஆலோசனைககளும், கருத்துக்களும் இந்தப் பயிற்சியில் உள்வாங்கப்பட்டால் தான் அது பரிபூரணமாக அமையும். இதுவரை காலமும் நாம் எமது சமூகம் சார்ந்த அறிஞர்கள்,வளவாளர்களைக் கொண்டு பெற்ற பயன் கடைசியில் இதுபோன்ற கொலையாளிகளை உருவாக்கக் காரணமாக அமைந்ததா என அடுத்த சமூகம் கேள்விகளை எழுப்புகிறது.அவற்றுக்கு நமது பதில் என்ன?

    ReplyDelete
  3. Alhamdhulillah ! meritorious service.
    As noblog said, terrorism must be obliterated. Hence meticulous measures should be taken to include such topics.

    ReplyDelete

Powered by Blogger.