Header Ads



ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்,, பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை நிராகரித்தார் மைத்திரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என,  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தெரிவுக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட போதே  இதனைக் கூறியுள்ளார்.

இந்த அறிக்கையை ஏற்க முடியாது எனக் கூறிய சிறிசேன, அதை அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக, பதிவு செய்ய வேண்டாம் என்றும், அமைச்சரவையை கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பதிலாக பாதுகாப்பு குறைபாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளை ஆராயுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கு பிரதானமாக, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அத்துடன், அரசாங்கத் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

1 comment:

  1. Good
    தெரிவுக்குழு அறிக்கை ஒரு கண்துடைப்பு

    ReplyDelete

Powered by Blogger.