Header Ads



நாட்டின் தலைவராக கோத்தபாயவை தெரிவு செய்யாவிட்டால், எதிர்கால தலைமுறை எம்மை சபிக்கும்

போரை முடிவுக்கு கொண்டு வர பங்களிப்பை வழங்கிய படையினர் தற்போது பலர் மறந்து விட்டதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற வியத் மக அமைப்பின் கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் சரியான தலைவராக, எமது நாட்டின் தலைவராக கோத்தபாய ராஜபக்ச தெரிவு செய்யாவிட்டால், எமது எதிர்கால தலைமுறை எப்போதோ ஒரு நாள் எம்மை சபிக்கும்.

நீங்களே எங்களுக்கு இருக்க தாய் நாட்டை இல்லாமல் செய்தீர்கள் என அவர்கள் கூறுவார்கள். நீங்களே எம்மை நாடற்றவர்களாக மாற்றினீர்கள்.

நீங்களே எமது நாட்டின் வளங்களை விற்பனை செய்யும் போது அமைதியாக இருந்தீர்கள், இதனால், உங்களை சபிக்கிறோம் என்று எதிர்கால தலைமுறையினர் கூறுவார்கள்.

அவர்கள் எமது பிள்ளைகளையும் சபிப்பார்கள். இதனால், நன்றாக சிந்தித்து, அக்கறையுடன் புரியாதவர்களுக்கு புரியவைத்து, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது கடமையை நிறைவேற்றுவோம்.

எமது நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாள் நவம்பர் 16 ஆம் திகதி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.

எமது மக்கள் தாய் நாட்டை நேசிக்கும் மக்கள், எதிர்கால சந்ததியை நேசிக்கும் மக்கள் சரியான சிந்தித்து, சரியான நபரை எமது நாட்டின் தலைவராக தெரிவு செய்யவில்லை என்றால், எமது நாடு இத்தோடு முடிந்து விடும் எனவும் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. கோட்டாவை தெறிவு செய்தால் சபிப்பதற்கு எதிர்கால சந்த்தியே இருக்காது.

    ReplyDelete
  2. paarraaaaa kelambittayya kelampittu..kooottam kelampittu..!

    ReplyDelete
  3. makkale kothavai safithu vittarkale?

    ReplyDelete

Powered by Blogger.