Header Ads



நாடு முழுவதும் போலி, உம்ரா முகவர்கள் அதிகரிப்பு - அவதானமாக இருக்க வேண்டுகோள்

நாட்டின் பல பகு­தி­களில் போலி உம்ரா முக­வர்கள் செயற்­பட்டு வரு­வ­தாக தொடர்ந்தும் முறைப்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன.

அதனால் போலி உம்ரா முக­வர்­க­ளுக்கு பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என அரச ஹஜ் குழு பொது­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள உம்ரா முகவர் நிலை­யங்­க­ளூ­டா­கவே பய­ணங்­களை மேற்­கொள்­ளு­மாறும் வேண்­டி­யுள்­ளது.

இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் கருத்து தெரி­விக்­கையில்,  திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­ப­டாத உம்ரா முக­வர்கள் குறித்து பொது­மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். அவ்­வா­றான முக­வர்­களால் ஏமாற்­றப்­பட்டால் அதற்கு திணைக்­களம் பொறுப்­பாக மாட்­டாது. நாட்டின் பல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் இவ்­வா­றான முக­வர்­க­ளினால் ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் முறைப்­பாடு செய்­துள்­ளார்கள். அவ்­வாறு ஏமாற்­றப்­பட்­ட­வர்கள் பொலிஸ் நிலை­யத்­திலும் முறைப்­பா­டு­களைப் பதிவு செய்­யு­மாறு வேண்­டப்­பட்­டுள்­ளார்கள்.

இதே­வேளை திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளாது உம்ரா பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டாம் எனவும், பதிவு செய்து கொள்­ளாது இயங்கி வரும் முக­வர்கள் உட­ன­டி­யாக திணைக்­க­ளத்தில் பதிவு செய்து கொள்­ளு­மாறும் வேண்­டப்­பட்­டுள்­ளார்கள் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

உம்ரா பய­ணத்தை திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம் பயணம் மேற்­கொள்ளும் முகவர் தொடர்பிலான விபரங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைத் தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.

– ஏ.ஆர்.ஏ.பரீல் / Vidivelli

3 comments:

  1. hellooo catch them and take legal action without talking nonsense

    ReplyDelete
  2. Why don’t you guys publish names and other details of all registered Umra brokers in media outlets?

    ReplyDelete
  3. Asalamu Alaikum.pls enter the contract No thanks.
    .

    ReplyDelete

Powered by Blogger.