Header Ads



ஹிஸ்புல்லா - கோத்தபாய ஒப்பந்தம் நடந்ததா...? நாமல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்வித ஒப்பந்தங்களையும் செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒப்பந்தங்கள் செய்துகொள்வது, தேர்தல் சட்டத்தை மீறுவதாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பெற்றுக் கொள்ளும் வாக்குகள் கோத்தபாய ராஜபக்சவுக்கு கிடைக்கும் வாக்குகளாகும் என எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நாமல் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அப்போ ஒரே கட்சியில் இருக்கும் s p திசானாயக்க கூறியது ஏன்? அதுமட்டுமல்ல இந்த விடயம் பற்றி திரு.ஹிக்ஷ்புல்லா கூட உன்மையா அல்லது பொய்யா எனக் கூட ஒரு மறுப்பரிக்கை கூட விடவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.