Header Ads



ஈஸ்டர் படுகொலைகளை ஜனாதிபதி தேர்தலுக்கு, பயன்படுத்துவது இனத்துவேசத்தைப் பரப்பும் செயலாகும்

ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவங்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலாபம் தேடிக்கொள்வதற்கு முயற்சிப்பார்களானால், அதற்கு எவ்விதத்திலும் துணை போக வேண்டாம் எனவும் பொறுப்புடனும், நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கிறிஸ்தவ சமூகத்திடம் இலங்கை திருச்சபையின் குருநாகல் ஆயர் கித்சிறி பெர்னாண்டோ வேண்டுகோள்விடுத்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  

2019ஈஸ்டர் தின படுகொலைகளை எவராலும் நியாயப்படுத்த முடியாது. இப்போது கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன?. முதலில் இதுபோன்ற மிலேச்சத்தனமான காரியங்களை தடுப்பதற்கும், இக்கொடூர சம்பவங்களை முன்னெடுத்தவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்த அவசியமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.  

எனினும், இதனை நாம் செய்யும்போது ஒருபோதும் துவசக் கண்கொண்டு பார்க்கக்கூடாது. அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பொது இச் சம்பவங்களை முன்வைத்து யாராவது இலாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டால் கிறிஸ்தவ சமூகம் அதற்கு துணை போய்விடக் கூடாது.

அவ்வாறு செயற்பட முனைபவர் இனங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டி இனத்துவேசத்தைப் பரப்பி மக்களது இயல்பு வாழ்க்கையைக் குழப்பி அதன் மூலம் சுய அரசியல் இலாபம் தேடிக்கொள்ளும் அற்பத்தனமான செயலாகவே நாம் பார்க்கின்றோம். இந்த இடத்தில் இயேசுநாதர் போதித்த ஒரு வாசகத்தை நினைவுபடுத்துகிறேன்.

“நாம் புறாக்களைப்போல் அப்பாவிகளாகவும், பாம்புகளைப் போன்று புத்திசாலிகளாகவும் இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.