Header Ads



சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு - 4 பெண்களும் அடக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீக் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

உயர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று ஆறு மாதங்களை கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் நம்பர் மாதம் 07ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

கைதுசெய்யப்பட்ட 64 பேரில் முன்னர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய 63 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.