Header Ads



வியூகம் அமைக்கும் சந்திரிக்கா - நவம்பர் 5 இல் மாநாடு நடத்துகிறார்

சந்திரிகா குமாரதுங்க லண்டனில் இருந்து, நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பியுள்ளதை அடுத்து, கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள- குமார வெல்கம போன்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியுள்ள சந்திரிகா- வெல்கம அணியின் சிறப்பு மாநாடு, வரும் நொவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில், எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் இயக்கத்தின் உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்டம் முடிவெடுத்திருந்த நிலையில், சந்திரிகா குமாரதுங்க லண்டனுக்குப் பயணமாகியிருந்தார்.

நாடு திரும்பியுள்ள அவர், கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்ற நிலையில், தயாசிறி ஜயசேகர போன்ற சுதந்திரக் கட்சித் தலைவர்கள் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.