Header Ads



புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி - புதிய மாணவர் அனுமதி 2020

இலங்கை வரலாற்றில் மிகப் பலைமையான அரபுக் கல்லூரிகளில் முதன்மையான காஸிமிய்யா அரபுக் கல்லூரி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஹஸரத் (மதனி) அவர்களின் தலைமையில் கடந்த பல வருடங்களாக புத்தளம் மண்ணில் இயங்கி வருகின்றமை யாவரும் அறிந்ததே.

கிதாபு பிரிவு மற்றும் ஹிப்ல் பிரிவு என இரண்டு பிரவுகளாக நடைபெறும் குறித்த மத்ரஸாவில் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா கற்கைகள் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர் குலாத்தினால் கற்பிக்கப்படுவதோடு மாணவர்கள் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர் தரத்திற்காகவும் தயார்படுத்தப்படுகின்றனர்.

மேலும் அரச அங்கீகாரம் பெற்ற அஹதிய்யா, தர்மாச்சாரிய, அல்ஆலிம் பரீட்சைகளுக்காகவுவும் தயார் படுத்தப்படுவதோடு  அரபு, ஆங்கிலம், சிங்களம் போன்ற மொழிகளும் தகவல் தொழிநுற்ப பாடங்களும் கற்பிக்கப் படுகின்றமை விஷேட அம்சமாகும்.

பிள்ளைகளின் உள மற்றும் உடல் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு இணைப்பாடவிதான செயற்பாடுகளான மாவட்ட, தேசிய ரீதியான போட்டிகளுக்கு தயார்படுத்ப்படுவதோடு, கரப்பந்து மற்றும் கராதே போன்ற விளையாட்டு பயிற்சிகளுக்குமான ஏற்பாடுகளும் காஸிமிய்யாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு செய்து கொடுக்கப்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு வகையில் சிறந்த முன்மாதிரிகளை உருவாக்கிடும் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் 2020 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப் பரீட்ச்சை இன்ஷா அல்லாஹ் 2019.12.15 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் இடம் பெற உள்ளதாக கல்லூரியன் பிரதி அதிபர் அஷ்ஷெய்க் மர்ஸுக் (மக்கி) அவர்கள் எம்மிடம் தெரிவித்தார்.

மேலதிக விபரங்களுக்கு 032 2265738, 077 4257372, 077 4377788 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

M. Riskhan Musteen


No comments

Powered by Blogger.