Header Ads



16ம் திகதிக்குப்பின் சுதந்திர கட்சி + பொதுஜன முன்னணி கூட்டு அரசாங்கம் உருவாக்கப்படும்

நொவம்பர் 16ம் திகதிக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் கூட்டு அரசாங்கம் உருவாக்கப்படும் என்று, சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலனறுவை – கதுருவெல  பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றதன் பின்னர் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் உரையாற்றிய சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தொழில்நுட்பத்திற்கு முதன்மை இடம் வழங்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப விருப்பதாக கூறினார்.

சர்வதேச நாடுகளுக்கு சொந்தமாக இருந்த நாட்டின் துறைமுகங்களை பொதுமக்களுக்கு கையளித்த பெருமை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியேசாரும்.

எமது நாட்டு உணவுகளில் போசாக்கு நிறைந்துள்ளது.

உணவுகளுக்காக ஏனைய நாடுகளை பார்த்துக்கொண்டிருக்க அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டர்.

தமது அரசாங்கத்தின் ஊடாக சகல விவசாயிகள் பெற்றுள்ள கடனையும் இல்லாது செய்வதற்கு தீர்மானித்துள்ளோம்.

சிறந்த கல்வி முறை ஒன்று இல்லாமை காரணமாக பெரும்பாலான இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்கள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.

தற்போது தொழிநுட்ப ரீதியில் தாம் பல்வேறு முன்னேற்றங்களை காணவேண்டியுள்ளது.

அதற்கு முதலில் அதிவேக இணைய வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.

இவையனைத்து தம்மால் மேற்கொள்ள முடியாத ஒன்றல்ல.

ஏனெனில் கடந்த காலங்களில் யுத்தத்தை நிறைவு செய்யமுடியாது என தெரிவித்த போதிலும் அதனை முடிவுறுத்தினோம்.

ஆகவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்துள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டணி மீது நம்பிக்கை கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.