Header Ads



கோத்தபாய அல்ல 10 ஜாம்பவான்கள் வந்தாலும், சஜித்தை தோற்கடிக்க முடியாது - முஜிபுர் ரஹ்மான்


கோத்தபாய ராஜபக்ச அல்ல பத்து ஜாம்பவான் வீரர்கள் மீண்டும் வந்தாலும் சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 65 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற செய்த மத்திய கொழும்பில் இம்முறையும் அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் சஜித்தை வெற்றி பெற செய்வோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த கூட்டம் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

1 comment:

  1. அட. நல்ல நம்பிக்கையில் இருக்கிறாங்க. பாருங்க.

    ReplyDelete

Powered by Blogger.