September 29, 2019

ஞானசாரரை கல்லில் கட்டி, கடலில் போடுமாறு கோரிக்கை

நாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர்களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

பல்லின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் ஞானசார தேரர் போன்ற இனவாத விஷக்கிருமிகளை வைக்கக் கூடாது அது ஒட்டு மொத்த நாட்டையே அழித்து விடும் ஆகவே தமிழ் சிங்கள மக்களுடன் சேர்ந்து அனைவரும் ஒருமித்து நாட்டின் எதிர்கால நன்மை கருதி ஞாசார தேரரை கடலில் போட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதத் துறவியருக்கு தனிச் சட்டங்கள் ஏதேனும் இயற்றப்பட்டுள்ளதா? எதற்காக நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அட்டூழியம் செய்த ஞானசரா தேரர் உட்பட பிக்குகளை கைது செய்யவில்லை? அறிவிலியான ஞானசார தேரர் கூறும் இலங்கை சிங்கள பௌத்த கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் வடக்கு கிழக்கு தாயக மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள்.

அதை ஏற்க வேண்டிய எந்த அவசியமும் தமிழர்களுக்கு இல்லை. தெற்கில் குடியிருக்கும் போதே பிசாசு போல் இனவாத ஆட்டம் போடும் ஞானசார தேரர் வடக்கில் குடியேறி மீண்டும் ஒரு இனக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறாரா? ஞானசார தேரர் உண்மையான தீட்சை பெற்ற பௌத்த துறவியா என்னும் சந்தேகம் எழுகிறது. ஏனெனில் புத்த பகவானின் பஞ்சீலக் கொள்கையை கடைப்பிடிக்கும் எவரும் இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் அண்மையில் வவுனியா கல்குனா மடுவில் புத்த விகாரை உள்ளே ஒரு விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு எனது ஒதுக்கீட்டில் இருந்து நிதி வழங்கப்பட்டது. அவர்கள் பௌத்தர்களா? அல்லது ஞானசார தேரர் பௌத்தரா? அதனால் தான் கூறுகிறேன். இலங்கை இன முறுகலில் இருந்து விடுபட வேண்டுமானால் உடனடியாக ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

5 கருத்துரைகள்:

இனியாவது தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.தமிழ் மக்களை சில வங்குரோத்து இனவாத அரசியல் வாதிகள் பிரதேச வாதம் பேசி பிரிக்க ஆரம்பித்துல்லனர்.மிக கவனமாக தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.அவர்கள்தான் இந்த தேரருக்கும் குடை பிடித்தார்கள்

ஒரு விடயத்தை இங்கு கூற வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் முதுகெலும்பு உள்ளவர்கள் என்பதை எங்க நிரூபித்து விட்டார்கள். இந்த ஞானசாரை எதிர்த்துப் பேசக் கூடிய துணிவு அவர்களுக்கு மாத்திரமே இருக்கிறது. ஹிஸ்புல்லா அசாத் சாலி இவர்களில் நண்பர் ஞானசாரர்.

ஐயா உங்கட ஐடியா எனக்கெண்டா நல்லாப்படல்ல. ஒருக்கா அண்ண அஜனுட்ட கேளுங்கோ

இவர் ஓரு அம்பு, இவரை கடலில் போடுவதை விட, ஏவியவனை கடலில் கட்டி போடுவதே சிறந்தது. அதற்கான வாய்ப்பு தேர்தல் மூலம் கிடைக்க இருக்கிறது, சிந்தித்து செயல்பட்டால் ஓரளவாவது கட்டுக்குள் வரலாம். முழுமையான அரசியல் மாற்றத்துக்கான வழியை சிந்தித்து உங்கள் வாக்குகளை எடுங்கள். ஆட்சி அதிகாரத்தை கொடுப்பது இறைவன் கையில் உள்ளது.

Post a comment