Header Ads



"வெற்றி தொடர்பில் கற்பனை செய்யவும் கூட ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியாது"

ஐக்கிய தேசிய கட்சியினுள் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குள் வெற்றி தொடர்பில் கற்பனை செய்யவும் கூட ஐக்கிய தேசிய கட்சிக்கு முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். 

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்திற்கு பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "திருடர்களை பிடிக்கவில்லை, தண்டனை வழங்கவில்லை, திருட்டை தடுக்கவும் இல்லை. வந்தவுடன் மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபட விக்கிரமசிங்க தப்பினருக்கு முடியாது. 

ஐக்கிய தேசிய கட்சி எவரை வேட்பாளராக நிறுத்தினாலும், திருட்டு, ஊழல், மோசடி உள்ள மரபணு பண்புகள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் இருந்து மாறாது. 

அதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் தொண்டர்களுக்கு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை தொடர்பில் நம்பிக்கை இல்லை. 

நாடு முழுவதும உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தொண்டர்கள் புதிய எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். அது ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் இல்லை. தேசிய மக்கள் சக்தி அனுர திஸாநாயக்கவின் தலைமைத்துவம் தொடர்பிலாகும் என்றார்.

No comments

Powered by Blogger.