Header Ads



பௌத்த பிக்குவின் உடலை, அடக்கம்செய்யும் விவகாரம் - ஞானசாரரும் களத்தில் குதிப்பு


முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு மரணமான நிலையில் அவரின் உடலை நீராவியடியில் தகனம் செய்வதற்கு தடைகோரி பிள்ளையார் ஆலயத்தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் மீதான விசாரணை தற்போது முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கு விசாரணைகாக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு வருகை தந்த பின்னர் தற்போது நீராவியடி பிள்ளையார் ஆலயம் நோக்கி சென்றுள்ளனர்.

வழக்கு விசாரணைகாக சிங்கள சட்டத்தரணிகள் பெருமளவானோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர். ஆலய நிர்வாகம் சார்ப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ,மணிவண்ணன் ,சுகாஸ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகியுள்ளனர்.

tamilan

2 comments:

  1. Wow come back.ajan உங்க ஆழு இப்ப உங்களுக்கு எதிரா களம் புகுந்து விட்டார்.செம காமெடி.ajan நீர் இனி சில காலத்துக்கு ஒழிந்து விடுவீர்.இந்த வலைத் தளத்திற்கு வரமாட்டீர் ஹீ ஹீ

    ReplyDelete

Powered by Blogger.