Header Ads



ஞானசாரர் கைது செய்யப்படுவாரா..? கைது செய்யுமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

நீதிமன்ற உத்தரவை மீறி முல்லைத்தீவு குருகந்த ரஜமகாவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்த பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு வட மாகாண சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விகாராதிபதி கொலம்ப மோதாலங்காரகித்தி ஹிமியின் பூதவுடலை விகாரை வளவில் அடக்கம் செய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டாலும் சங்க சபாவின் தீர்மானத்துக்கமையவே அவர் அங்கு அடக்கம் செய்யப்பட்டார் எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு தன்னால் இணங்க முடியாது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயமும், குருகந்தே ரஜமகா விகாரையும் அருகருகே அமைந்துள்ள நிலையில், கோவிலுக்கு அருகாமையில் இறந்த ஒருவரின் பூதவுடலை அடக்கம் செய்வது கோவிலின் புனிதத்தைப் பாதிக்கும் எனக் கூறி கோவில் நிர்வாகம் இதற்கெதிராக முறைப்பாடு செய்திருந்தது.

இதனால் நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் இவரது பூதவுடலை அடக்கம் செய்யக் கூடாது என பதில் நீதவான் என். சுதாகரன் அறிவித்திருந்தார். பின்னர் பூதவுடலை கோவிலுக்குப் பின்னாலுள்ள கடற்கரையில் அடக்கம் செய்யுமாறும், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டுமாணப் பணிகள் எதுவும் செய்யக் கூடாது எனவும் பிரதான நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்புக்கு தம்மால் உடன்பட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நீதிமன்றத்தை அவமதித்த நான்கு குற்றங்களுக்கு அவர் 19 வருட கால சிறை விதிக்கப்ட்டிருந்தார். அவருக்கு மன்னிப்பளித்து ஜனாதிபதி சிரிசேன விடுதலையளித்த பின் மீண்டும் அவர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்திருக்கிறார். எனவே இவரைக் கைது செய்ய வேண்டும் என வடமாகாண சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

10 comments:

  1. கிழக்கு தமிழர்களுக்கு தொடர்ச்சியாக துன்பம் கொடுத்துவந்த ஹிஸபல்லா வின் வாலை வெட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தவர் ஞானசேர தான், TNA அல்ல.

    எனவே, வடக்கு மக்கள் இந்த கோவில் சம்பவத்தை மறந்து, ஞானசார யை மன்னிக்க வேண்டும்

    ReplyDelete
  2. அட அஜன் நீ தாண்டா ஆள் வடக்கு தமிழனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லிக்கொடுடா புத்தி பேதலித்து கெடக்குறானுக.

    ReplyDelete
  3. ஞானம் Ajan ku father o theriya

    ReplyDelete
  4. Koyilinul saravukku silai veithu SAMIYO GNANA SAMIYO endu kumbidunge

    ReplyDelete
  5. This guy Ajan does not know what is he talking about. Hisbulla was one of the guys who visited Gnanasara in the jail and pleaded for his release with My3 although many Muslims did not like it. Hisbulla never had any quarrel with Gnanasara and vice versa.

    ReplyDelete
  6. ஸஹ்ரான் செத்து மடிந்தாலும் அவனுடைய சிந்தனையும் அழிவுப்போக்கில் சிந்திக்கும் கூட்டம் இந்த நாட்டில் அப்படியே இருக்கின்றது. இது புனருத்தாபனம் செய்யப்படவேண்டும்.

    ReplyDelete
  7. ஆம் அவரை வடக்கு மக்கள் மன்னிக்கத்தான் வேண்டும். ஏனென்றால் தமிழர்களுக்கு மன்னிப்பதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. எதிர்த்து நிற்பதற்கும் இப்பொழுது இடுப்பில் வளம் இல்லை. வாழவேண்டும் என்பதற்காக ஈவிரக்கமில்லாமல் மனிதர்களைக் கொன்று இரத்தம் குடித்த பாசிசப் பயங்கரவாதப் புலிகளுக்கு இப்படி ஒரு நிலைமை வருமென்று நாங்கள் நினைக்கவேயில்லை. புலிகளையும் புலிகளின் வாரிசுகளையும் அஜன் அன்றனி போன்ற விசச் செடிகளையும் களைந்தெறிந்து இந்த நாட்டை சுதந்திரத்தால் சுத்தம் செய்த மஹிந்தவையும் அவரது குடும்பத்தையும் முஸ்லிம்கள் நன்றியுணர்வோடே காண்பார்கள் என்றைக்கும்.

    ReplyDelete
  8. I think ajan has a mental illness

    ReplyDelete
  9. அஜன் உனது அர்த்தமில்லா கருத்துக்களுக்கு அடுத்தவர்கல் உன்னை கலாய்ப்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.ஏனப்பா அஜன் ஏதாவது மன நோய் உனக்கு இருந்தால்,இந்த நவீன காலத்தில் அதற்கு நிறைய சிகிச்சைகள் உள்ளது.போய் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ளலாமே.

    ReplyDelete
  10. Well said Rizard (last comment)

    ReplyDelete

Powered by Blogger.