Header Ads



சஜித் ஆதரவு அரசியல்வாதிகள் அச்சுறுத்தும், கீழ்த்தர செயற்பாட்டில் இறங்கியுள்ளதாக குற்றச்சாட்டு

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுமாறு கோரி தயாரிக்கப்பட்டுள்ள மனுவில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பலவந்தமாக கையொப்பம் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்கள் சிலரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அவர்களிடம் கையொப்பம் பெறப்படும் இந்த முறையற்ற திட்டத்திற்கு எதிராக துரிதமான நடவடிக்கையை மேற்க்கொள்ளுமாறு அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளனர்.

சஜித் பிரேமதாஸ எந்தவொரு வழியிலோ ஜனாதிபதி வேட்பாளரை பெற்றுக்கொண்டு கட்டாயம் ஜனாதிபதியாவதால், அப்போது கட்சியின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கட்சியின் தலைவர் பதவியை அவர் தானாகவே பெறுவார் எனவும், சஜித் பிரேமதாஸவிற்கு ஜனாதிபதி வேட்பாளரை பெற்றுக்கொடுக்குமாறு கோரும் இந்த மனுவில் கையொப்பம் இடாவிடின் எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்பு மனுக்களை எதிர்ப்பார்க்க வேண்டாம் எனவும் அந்த அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர்கள் அச்சுறுத்தும் வகையில் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் கொடுக்கும் நபர்களுக்கு எதிராக கடும் தீர்மானம் காலதாமதம் இன்றி எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளதாக பிரதமர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. இதை வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கிறது.நாடாலுமன்ர உறுப்பினர்களை மிரட்ட அவர்கள் என்ன சிறு குழந்தைகலா?

    ReplyDelete

Powered by Blogger.