Header Ads



அல­ரி­மா­ளிகை, அமைச்­சுக்­களை தேர்­த­லுக்கு பயன்­ப­டுத்த வேண்டாம் - ரணில் உத்தரவு

ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்கு அல­ரி­மா­ளி­கை­யையோ அல்­லது அமைச்­சுக்­களின் அலு­வ­ல­கங்­க­ளையோ பயன்­ப­டுத்­து­வதை தவிர்க்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் கட்­சியின் பிர­மு­கர்­க­ளுக்கும் அறி­வித்­துள்ளார்.

தேர்தல் நட­வ­டிக்­கை­களை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தா­விலும் அதற்­கென்று அமைக்­கப்­பட்­டுள்ள இடங்­க­ளிலும் மேற்­கொள்­ளு­மாறும் கொழும்­புக்குள் வேண்­டு­மானால் புதிய அலு­வ­லகம் ஒன்­றிணை அமைக்­கு­மாறும் பிர­தமர்  தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விப்பு வெ ளியி­டப்­பட்­டுள்ள நிலையில் கட்­சியின் வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பித்­துள்­ளது.

சிறி­கொத்­தாவில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­கு­ழுக்­கூட்­டத்தின் போது தேர்தல் நடவடிக்ககைகளுக்கு அலரிமாளிகையையோ  அமைச்சுக்களையோ பன்படுத்தவேண்டாம் என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments

Powered by Blogger.